லார்ட்ஸ் மைதானத்தில் விராட் கோலியின் மோசமான சாதனை – இந்த முறை சாதிப்பாரா?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் 3வது மற்றும் கடைசிப் போட்டி, வரலாற்றுச் சிறப்புமிக்க லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஜூலை 19, 2026 நாளை நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் விராட் கோலியின் மோசமான சாதனையால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் 3வது மற்றும் கடைசிப் போட்டி, வரலாற்றுச் சிறப்புமிக்க லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஜூலை 19, 2026 நாளை நடைபெறவுள்ளது. இத்தொடரில் 2 அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில், கோப்பையை வெல்லும் முனைப்புடன் இரு அணிகளும் களமிறங்கவுள்ளன. மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய இந்தப் போட்டியில் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி மீது அனைவரின் பார்வையும் இருக்கும் வேளையில், இந்த மைதானம் விராட் கோலிக்கு ஒரு சவாலாகவே அமைந்துள்ளது.
இதுவரை லார்ட்ஸ் மைதானத்தில் விராட் கோலி விளையாடிய போட்டிகளில் அவரது செயல்திறன் மிகவும் மோசமாக இருந்திருக்கிறது. இங்கிலாந்து எதிராக தொடரை வெல்ல இந்த போட்டியில் அந்த அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ள நிலையில், இந்த தகவல் ரசிகர்களைக் கவலையடையச் செய்துள்ளது.
இதையும் படிக்க : IND vs ENG: ரோஹித் சர்மாவுக்கு லாஸ்ட் மேட்ச்? லார்ட்ஸில் இதுவரை செயல்திறன் எப்படி?




லார்ட்ஸ் மைதானத்தில் கோலியின் மோசமான புள்ளிவிவரங்கள்
உலகெங்கிலும் உள்ள மைதானங்களில் சதங்களையும் அரை சதங்களையும் வாரி குவித்துள்ள விராட் கோலி, வரலாற்றுச் சிறப்புமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் மட்டும் ரன் எடுக்க திணறியுள்ளார். இந்த மைதானத்தில் அவரது ஒருநாள் போட்டி புள்ளிவிவரங்கள் ஒரு கெட்ட கனவைப் போல அமைந்துள்ளன. லார்ட்ஸில் இதுவரை மொத்தம் 9 ஒருநாள் இன்னிங்ஸ்களில் கோலி விளையாடியுள்ளார். ஆச்சரியப்படும் விதமாக, இந்த 9 இன்னிங்ஸ்களிலும் அவரால் ஒரு அரை சதம் கூட அடிக்க முடியவில்லை. இங்கு அவரது பேட்டிங் சராசரி 22.66 ஆக உள்ளது. இது அவரது சிறப்பான கிரிக்கெட் வாழ்க்கையை ஒப்பிடுகையில்
இந்த மைதானத்தில் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, 25.66 சராசரியுடன் மொத்தம் 77 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்; இதில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 45 ஆகும். மேலும், லார்ட்ஸில் விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளில், 21.16 சராசரியுடன் 122 ரன்களை எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளிலும் கூட அவரது அதிகபட்ச ஸ்கோர் 42 மட்டுமே; மேலும் இக்காலகட்டத்தில் ஒருமுறை அவர் ரன் ஏதுமின்றி (டக் அவுட்) ஆட்டமிழந்துள்ளார்.
இதையும் படிக்க : IND vs ENG: ரோஹித் சர்மா திணறுகிறாரா? பேட்டிங் பயிற்சியாளர் கொடுத்த ட்விஸ்ட்!
கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் சாதிக்காத ஒரே மைதானம்
விராட் கோலியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில், 50 ரன்கள் என்ற மைல்கல்லை ஒருமுறை கூட எட்டாமல் மூன்றுக்கும் மேற்பட்ட இன்னிங்ஸ்களில் விளையாடிய ஒரே மைதானமாக லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் திகழ்கிறது. உலகில் வேறு எந்த மைதானத்திலும் கோலி ஒரு அரை சதம் கூட அடிக்காமல் இத்தனை போட்டிகளில் விளையாடியதில்லை. ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள போட்டி தொடரின் முடிவைத் தீர்மானிப்பது மட்டுமல்லாமல், 22 ஆண்டுகால தவிப்புக்கு முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்பையும் இந்தியாவுக்கு வழங்குகிறது. எனவே, இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி தொடரை வெல்ல வேண்டுமானால், விராட் கோலி தனது இந்த மோசமான சாதனையை மறந்துவிட்டு, வெற்றியைத் தேடித்தரும் வகையிலான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.