IND vs ENG: ரோஹித் சர்மாவுக்கு லாஸ்ட் மேட்ச்? லார்ட்ஸில் இதுவரை செயல்திறன் எப்படி?
Rohit Sharma in Lord's: லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை ரோஹித் சர்மாவுக்கு அவ்வளவு சிறப்பாக இல்லை. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்டேடியமான லார்ட்ஸில் ரோஹித் சர்மா 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அவற்றில் ஒன்றில் டக் அவுட்டும், 2வதில் 15 ரன்களும் எடுத்துள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு மேலாக ரோஹித் சர்மாவின் (Rohit Sharma) ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிவு குறித்து அதிகமாக பேசப்பட்டு வருகிறது. பிசிசிஐயின் ஆண்கள் தேர்வுக் குழு, 2027 உலகக் கோப்பைத் திட்டங்களில் ரோஹித் சர்மா இனி இடம்பெறவில்லை என்றும் அவரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக, லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடைபெறும் 3வது ஒருநாள் (IND vs ENG 3rd ODI) போட்டியே ‘ஹிட்மேனின்’ கடைசி சர்வதேசப் போட்டியாக அமையக்கூடும் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் ரோஹித் சர்மாவின் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 சாதனைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
ALSO READ: விரைவில் ரோஹித் சர்மா ஓய்வா..? தொடக்க வீரராக களமிறங்க காத்திருக்கும் 4 வீரர்கள்!
ரோஹித் சர்மாவின் அறிமுகம்:
ரோஹித் சர்மா தனது முதல் சர்வதேசப் போட்டியை 2007 ஜூன் 23 அன்று, பெல்ஃபாஸ்டில் அயர்லாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடினார். அதே ஆண்டு 2007 செப்டம்பர் மாதம் டி20 சர்வதேசப் போட்டிகளிலும், 2013-ல் டெஸ்ட் போட்டிகளிலும் அறிமுகமானார். கேப்டனாக, 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வெற்றிக்கு வழிநடத்திய ரோஹித், இறுதிப் போட்டிக்குப் பிறகு தனது ஓய்வை அறிவித்தார். கடந்த 2025ம் ஆண்டும், ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து திடீரென ஓய்வு பெற்றார். தற்போது, ரோஹித் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறார். ரோஹித் 2027 உலகக் கோப்பை வரை விளையாடுவார் என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.




லார்ட்ஸ் மைதானத்தில் ரோஹித் ஷர்மாவின் சர்வதேச சாதனை எப்படி இருக்கிறது?
லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை ரோஹித் சர்மாவுக்கு அவ்வளவு சிறப்பாக இல்லை. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்டேடியமான லார்ட்ஸில் ரோஹித் சர்மா 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அவற்றில் ஒன்றில் டக் அவுட்டும், 2வதில் 15 ரன்களும் எடுத்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை ரோஹித் சர்மா லார்ட்ஸில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். அந்தப் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம் 104 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு இன்னிங்ஸில் மட்டும் 83 ரன்கள் அடங்கும். அந்தப் போட்டியில் ரோஹித் சர்மா மொத்தமாக 2 சிக்ஸர்களையும் 13 பவுண்டரிகளையும் அடித்தார்.
ரோஹித் சர்மா லார்ட்ஸ் ஸ்டெடியத்தில் 2 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இரண்டுமே 2009 டி20 உலகக் கோப்பையில் நடைபெற்றன. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 5 ரன்களுக்கும், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 9 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்.
ALSO READ: ரோஹித் சர்மா திணறுகிறாரா? பேட்டிங் பயிற்சியாளர் கொடுத்த ட்விஸ்ட்!
புள்ளி விவரங்களின்படி, ரோஹித் சர்மா லார்ட்ஸில் சிறப்புமிக்க இன்னிங்ஸை ஆடியதில்லை. தற்போது, ரோஹித் சர்மா மீண்டும் லார்ட்ஸுக்குத் திரும்பியுள்ளார், மேலும் ஒரு பெரிய இன்னிங்ஸ் மூலம் தனது விமர்சகர்களுக்குப் பதிலடி கொடுப்பார் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் 2 போட்டிகளிலும் ரோஹித் சொதப்பியுள்ளார். முதல் போட்டியில் 21 பந்துகளில் 11 ரன்களும், இரண்டாவது போட்டியில் 47 பந்துகளில் 26 ரன்களும் எடுத்தார்.