AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கேள்விக்குறியாகும் ரோகித் சர்மாவின் எதிர்காலம்? இந்திய அணி எடுத்த முக்கிய முடிவு

இந்திய கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியைடய செய்துள்ளன. இந்த நிலையில் இந்திய அணியில் அவருக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும் என்பதில் கௌதம் கம்பீர் தலைமையிலான அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேள்விக்குறியாகும் ரோகித் சர்மாவின் எதிர்காலம்? இந்திய அணி எடுத்த முக்கிய முடிவு
கௌதம் காம்பீர் - ரோகித் சர்மா
Karthikeyan S
Karthikeyan S | Published: 16 Jul 2026 14:58 PM IST

இந்திய கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியைடய செய்துள்ளன. இந்த நிலையில் இந்திய அணியில் அவருக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும் என்பதில் கவுதம் கம்பீர் தலைமையிலான அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய கிரிக்கெட்டில் அனைத்து ஃபார்மெட்களிலும் ரோகித் சர்மா குறிப்பிடத்தக்கத பங்களிப்பை வழங்கியிருக்கிறார். இந்த நிலையில் அவர் கட்டுப்பாடுகள் இன்றி முழு திறனையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக அவருக்கு முழு சுதந்திரம் அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேள்விக்குறியாகும் ரோகித் சர்மாவின் எதிர்காலம்?

தற்போது ரோகித் சர்மா கடும் அழுத்தமான சூழலில் விளையாடி வருவதாகவும் இதனால் அவர் மீது விமர்சனங்களை முன் வைப்பதை விட அவருக்கு மன அமைதியும், போதுமான நேரமும் வழங்க இந்திய நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இ

தனால் அவரது ஒவ்வொரு இன்னிங்ஸையும் விமர்சிப்பதை விட அவரது ஒவ்வொரு அவருக்கு மன அமைதி அளித்து அவருக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே தங்களது நோக்கம் என இந்திய அணி தெரிவிக்கிறது. குறிப்பாக அவரது சாதனைகளை கருத்தில் கொண்டு அவருக்கு நம்பிக்கை அளிப்பதே முக்கியம் என்பதே தங்களது எண்ணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : CSK New Coach: தோனி கையில் சிஎஸ்கே பயிற்சியாளர் தேர்வு.. உற்றுநோக்கும் ரசிகர்கள்..!

மேலும் ரோகித் சர்மா நம்பிக்கையுடனும் மன அழுத்தம் இல்லாமலும் களமிறங்கினால், எந்த வித சூழலிலும் போட்டியின் போக்கையை மாற்றக் கூடியவர் என அணி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. சில நேரங்களில் அவசரமாக முடிவெடுப்பதை விட, வீரர்களுக்கு அளிக்கப்படும் நம்பிக்கை அதிக பலன் தரும் என கூறப்படுகிறது.

இதற்கிடையே வருகிற 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு இந்திய அணி மூத்த வீரர்களுக்கு தற்காலிக ஓய்வளித்து விட்டு முழுமையாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகக்கோப்பை தொடங்கும் சமயத்தில் ரோகித் சர்மாவுக்கு 41 வயதாகும் என்பதால் அவரது எதிர்காலம் குறித்து கேள்வி எழுந்துள்ளன. இந்த நிலையில் தான் ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து அணி நிர்வாகம் இத்தகைய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : IND vs ENG 2nd ODI: இந்திய அணியின் கேப்டனும் மாற்றம்.. நேரமும் மாற்றம்! ஏன் தெரியுமா..?

இந்த நிலையில், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தலைமையிலான இந்திய அணி நிர்வாகம், ரோஹித் சர்மாவுக்கு முழு சுதந்திரம் அளித்து, அவரது அனுபவத்தையும் தாக்கத்தையும் அதிகபட்சமாக பயன்படுத்த திட்டமிட்டிருப்பது இந்திய கிரிக்கெட் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

Follow Us