AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தொடர் தோல்வியில் இந்திய அணி – கேப்டன் மற்றும் பயிற்சியாளரை மாற்ற பிசிசிஐ முடிவு?

டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் படுதோல்வியை சந்தித்தது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பிசிசிஐ இந்திய அணியில் முக்கிய மாற்றங்களை செய்ய தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது .

தொடர் தோல்வியில் இந்திய அணி – கேப்டன் மற்றும் பயிற்சியாளரை மாற்ற பிசிசிஐ முடிவு?
கௌதம் கம்பீர்
Karthikeyan S
Karthikeyan S | Published: 10 Jul 2026 15:35 PM IST

டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் படுதோல்வியை சந்தித்தது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பிசிசிஐ இந்திய அணியில் முக்கிய மாற்றங்களை செய்ய தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், முதல் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. அதன்பின் நடைபெற்ற 3 போட்டிகளிலும் இந்திய அணி படு தோல்வியடைந்தது. இதனையடுத்து 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றி, வரலாற்று சாதனை படைத்தது.

பயிற்சியாளர் மாற்றம்?

குறிப்பாக, ஜூலை 9, 2026 நேற்று நடைபெற்ற 4வது போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்குப் பிறகு இந்திய அணியின் செயல்பாடு குறித்து பிசிசிஐ தீவிர ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய அணியின் வீரர்கள் மட்டுமின்றி பயிற்சியாளர்கள் குழுவின் செயல்பாடுகளும் விரிவாக ஆய்வு செய்யப்பட உள்ளதாக பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க : IND vs ENG: கடந்த 14 ஆண்டுகளிலும் 6 தொடர் வெற்றி.. இதுவரை இல்லாத அச்சுறுத்தலில் இந்திய அணி!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் பணிகாலம் 2027 ஆம் ஆண்டு வரை இருந்தாலும், இந்திய அணியின் மோசமான செயல்பாடுகள் காரணமாக அவரது இடமும் கேள்விக்குறியாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆய்வுக்கு பிறகு அவரையும் மாற்ற பிசிசிஐ முடிவெடுக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்ற நிலையில் அதனைத் தொடர்ந்து அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் மோசமான தோல்விகளை சந்தித்தது. குறிப்பாக அயர்லாந்துக்கு எதிரான தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. அயர்லாந்துக்கு எதிராக இந்திய அணியின் முதல் தோல்வி என்பதால் இது மோசமான தோல்வியாக பார்க்கப்படுகிறது.

கேப்டனை மாற்றியதுதான் தோல்விக்கு காரணமா?

டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் மாற்றப்பட்டு, புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்ட பிறகே இந்திய அணி தொடர்ந்து 2 டி20 தொடர்களை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டு, புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்ட பிறகே இந்திய அணி தொடர்ந்து இரண்டு டி20 தொடர்களை இழந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் கேப்டனை மாற்றியது சரியான முடிவு என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்னறர்.

இதையும் படிக்க : IND vs ENG: 3 போட்டிகளில் வாய்ப்பு.. 3லிலும் சொதப்பல்.. தடுமாறும் வைபவ் சூர்யவன்ஷி!

பிரிஸ்டலில் நடைபெற்ற 4வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புகளுக்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் 49 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 13.5 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எளிதாக எட்டியது.

Follow Us