AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Team India: இன்னொரு போட்டி, இன்னொரு தோல்வி.. மீண்டும் சாம்சனுக்கு வாய்ப்பா? கம்பீர் விளக்கம்!

Sanju Samson Comeback: நாட்டிங்ஹாமில் நடந்த 3வது டி20 போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில், பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதல் இறுதி வரை சொதப்பினர். தோல்விக்கு பிறகு பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது, ​​சஞ்சுவை அணியிலிருந்து நீக்கியது மற்றும் அவர் மீண்டும் அணிக்குத் திரும்பியது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

Team India: இன்னொரு போட்டி, இன்னொரு தோல்வி.. மீண்டும் சாம்சனுக்கு வாய்ப்பா? கம்பீர் விளக்கம்!
சஞ்சு சாம்சன் - கவுதம் கம்பீர்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 08 Jul 2026 17:48 PM IST

2026 டி20 உலகக் கோப்பைக்கு பிறகு, இந்திய அணிக்கு எதுவும் சிறப்பாக அமையவில்லை. சமீபத்தில், இந்திய அணி (Indian Cricket Team) அயர்லாந்தில் 2 போட்டிகளிலும், இப்போது இங்கிலாந்தில் இரண்டு டி20 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நேற்று அதாவது 2026 ஜூலை 7ம் தேதி ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, 202 ரன்கள் என்ற இலக்கை துரத்தும்போது வெறும் 76 ரன்களுக்குச் சுருண்டது. இதன்மூலம், இந்திய அணியின் பேட்டிங் லைன் அப் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக, சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது. அதன்படி, சாம்சன் திரும்புவாரா என்ற கேள்விக்கு மூன்றாவது டி20 போட்டிக்குப் பிறகான கேள்விக்கு, இந்தத் தொடரில் அணிக்குத் திரும்பக்கூடும் என்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் (Gautam Gambhir) தெளிவுபடுத்தினார்.

ALSO READ: தொடர் தோல்வி.. ஜிம்பாப்வே செல்லாத கம்பீர்.. பயிற்சியாளரை மாற்றுகிறதா பிசிசிஐ..?

2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி கோப்பையை வெல்வதில் முக்கியப் பங்காற்றிய சாம்சன், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் மோசமாக விளையாடினார். இந்த சுற்றுப்பயணத்தில் சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் விளையாடி, முறையே 5, 0, மற்றும் 1 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த 3 போட்டிகளிலும், சாம்சன் முதல் அல்லது இரண்டாவது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். இதனால், வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.இருப்பினும், இந்த முடிவு இந்திய அணியின் நிலைமையை மாற்றத் தவறிவிட்டது.

சஞ்சு சாம்சன் இந்திய அணிக்கு திரும்புவாரா..?

நாட்டிங்ஹாமில் நடந்த 3வது டி20 போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில், பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதல் இறுதி வரை சொதப்பினர். தோல்விக்கு பிறகு பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது, ​​சஞ்சுவை அணியிலிருந்து நீக்கியது மற்றும் அவர் மீண்டும் அணிக்குத் திரும்பியது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கம்பீர், டி20 உலகக் கோப்பையில் சஞ்சுவின் பங்களிப்பை மறக்க முடியாது, ஆனால் சில சமயங்களில் தற்போதைய ஆட்டத்திறனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று எளிமையாகப் பதிலளித்தார்.

இதுகுறித்து கம்பீர் பேசுகையில், ”சஞ்சு சாம்சன் தொடருக்குத் திரும்பலாம். ஆனால் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், சர்வதேச கிரிக்கெட்டில் முடிவுகளே முக்கியம். மேலும் நாங்கள் சிறந்த முடிவுகளைத் தரக்கூடிய சிறந்த அணி கூட்டணியைக் களமிறக்குகிறோம். மேலும், அணியில் ஒவ்வொருவரும் தங்கள் இடத்தைத் தகுதியின் அடிப்படையில் பெற வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன்.” என்றார்.

ALSO READ: சொதப்பிய பேட்ஸ்மேன்கள் – இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா படுதோல்வி

சமீபத்திய போட்டிகளின் அடிப்படையில் அக்ஸர் படேல் மற்றும் திலக் வர்மா போன்ற பேட்ஸ்மேன்களும் அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை. எனவே, அடுத்த 2 போட்டிகளுக்கான தங்கள் இடங்களைத் தக்கவைத்துக் கொள்ள இந்த 2 வீரர்களும்  தகுதியானவர்களா, அல்லது அவர்களுக்குப் பதிலாக சாம்சன் திரும்புவாரா என்பது குறித்து கம்பீரின் பதில் மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

Follow Us