AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Team India: தொடர் தோல்வி.. ஜிம்பாப்வே செல்லாத கம்பீர்.. பயிற்சியாளரை மாற்றுகிறதா பிசிசிஐ..?

Gambhir to Lose Coaching Duties: விவிஎஸ் லக்ஷ்மண் இதற்கு முன்னர் பலமுறை தலைமைப் பயிற்சியாளர் இல்லாத சமயங்களில் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். இளம் வீரர்களுடன் பணியாற்றியதில் அவருக்கு விரிவான அனுபவம் உண்டு. விவிஎஸ் லக்ஷ்மண் தற்போது பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (COE)-க்குத் தலைமை தாங்குகிறார்.

Team India: தொடர் தோல்வி.. ஜிம்பாப்வே செல்லாத கம்பீர்.. பயிற்சியாளரை மாற்றுகிறதா பிசிசிஐ..?
கவுதம் கம்பீர் - விவிஎஸ் லட்சுமண்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 07 Jul 2026 19:07 PM IST

ஜிம்பாப்வேக்கு எதிரான (IND vs ZIM) டி20 தொடருக்கான இந்திய அணியை (Indian Cricket Team) நேற்று அதாவது 2026 ஜூலை 6ம் தேதி அறிவித்த பிறகு , இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) பயிற்சியாளர்கள் தொடர்பாக ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. தகவல்களின்படி, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் அணியுடன் செல்ல மாட்டார். இதையடுத்து, கம்பீருக்கு பதிலாக முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் விவிஎஸ் லட்சுமண் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்பார். முன்னதாக, விவிஎஸ் லட்சுமண் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இந்திய அணியுடன் இதே பொறுப்பில் பணியாற்றுவார்.

ALSO READ: கேப்டனாக தொடரும் ஷ்ரேயாஸ்.. சாம்சன் நீக்கம்.. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்திய டி20 அணி அறிவிப்பு!

ஜிம்பாப்வே செல்ல மாட்டாரா கவுதம் கம்பீர்..?

டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையின் அறிக்கையின்படி, இந்தியாவின் பரபரப்பான சர்வதேசப் போட்டி அட்டவணையைக் கருத்தில் கொண்டு, பயிற்சியாளர் பொறுப்புகளை கவுதம் கம்பீர் மற்றும் விவிஎஸ் லட்சுமண் ஆகியோருக்குப் பிரித்து வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து, இந்தியா ஜிம்பாப்வேக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. போட்டி அட்டவணை மேலும் மேலும் பரபரப்பாகி வருவதால், கம்பீருக்கு ஓய்வளிக்கப்பட்டு, லக்ஷ்மணிடம் அப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கிடைத்த தகவலின்படி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷிகேஷ் கனிட்கர், விவிஎஸ் லக்ஷ்மணுடன் இணைந்து பேட்டிங் பயிற்சியாளராகவும், முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சுனில் ஜோஷி பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் பணியாற்றுவார்கள். இந்தப் பயிற்சி ஊழியர்கள் ஜிம்பாப்வே தொடர், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான ஒயிட் பால் தொடர் ஆகியவற்றிலும் இந்திய அணியுடன் தொடரலாம்.

விவிஎஸ் லக்ஷ்மணுக்கு இது கூடுதல் பொறுப்பா..?

விவிஎஸ் லக்ஷ்மண் இதற்கு முன்னர் பலமுறை தலைமைப் பயிற்சியாளர் இல்லாத சமயங்களில் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். இளம் வீரர்களுடன் பணியாற்றியதில் அவருக்கு விரிவான அனுபவம் உண்டு. விவிஎஸ் லக்ஷ்மண் தற்போது பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (COE)-க்குத் தலைமை தாங்குகிறார்.

பயிற்சியாளர் மாற்றுவதற்கு தோல்விதான் காரணமா?

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடர் வருகின்ற 2026 ஜூலை 23ம் தேதி முதல் தொடங்கும். இதற்கிடையில், 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் வருகின்ற 2026 செப்டம்பர் 19 முதல் 2026 அக்டோபர் 4 வரை நடைபெற உள்ளன. இந்தக் காலகட்டத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2026 செப்டம்பர் 27 முதல் 2026 அக்டோபர் 17 வரை 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடும். இரண்டு போட்டிகளின் தேதிகள் ஒரே நேரத்தில் வருவதால், கவுதம் கம்பீர் 2 இந்திய அணிகளுடனும் இருக்க முடியாது. இதன் விளைவாக, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் லட்சுமணன் இந்திய அணிக்கு பயிற்சி வழங்குவார். அதே நேரத்தில் கம்பீர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான உள்நாட்டுத் தொடரில் மற்றொரு இந்திய அணியுடன் இருப்பார்.

ALSO READ: அச்சமூட்டும் வானிலை..! மழையால் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 3வது டி20 ரத்தா?

கம்பீரின் பயிற்சியாளர் பயணம்:

கவுதம் கம்பீரின் பயிற்சியின் கீழ், இந்தியா 2025 சாம்பியன்ஸ் டிராபியையும் 2026 டி20 உலகக் கோப்பையையும் வென்றது. இருப்பினும், உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய டி20 அணியின் செயல்பாடு எதிர்பார்த்தபடி அமையவில்லை. இந்தியா, அயர்லாந்திடம் 0-2 என்ற கணக்கில் டி20 தொடரை இழந்ததுடன், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் தோல்வியைச் சந்தித்தது. தற்போது, ​​ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒரு இளம் அணியை சிறந்த செயல்திறனுக்கு வழிநடத்தும் சவாலை விவிஎஸ் லட்சுமண் எதிர்கொள்ள உள்ளார்.

Follow Us