IND vs ENG: வரலாற்றிலேயே முதல் முறை.. மோசமான சாதனையை சுமக்கும் ஷ்ரேயாஸ் ஐயர்!
Shreyas Iyer Unwanted Record: 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி தொடர்ச்சியாக மூன்று டி20 போட்டிகளில் தோல்வியடைவது இதுவே முதல் முறையாகும். இந்தத் தோல்விகளால் ஷ்ரேயாஸ் ஐயரின் அணிக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல், இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் 0-1 என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்துள்ளது.
டி20 கிரிக்கெட்டில் இதுவரை இந்திய அணிக்கு (Indian Cricket Team) 15 கேப்டன்கள் தலைமை தாங்கியுள்ளனர். இந்த பதினைந்து கேப்டன்களில் பதினான்கு பேர் எழுதாத ஒரு மோசமான சாதனையை ஷ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் (Shreyas Iyer) வெற்றிக்கான காத்திருப்பு மேலும் நீடித்தது. கேப்டனாகப் பொறுப்பேற்ற முதல் 4 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறத் தவறிய முதல் இந்திய கேப்டன் என்ற ஏமாற்றமளிக்கும் சாதனையை ஷ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார்.
ALSO READ: இந்திய அணியின் தோல்விக்கு காரணம் யார்..? ஷ்ரேயாஸ் ஐயர் ஓபன் டாக்!
மேல் மேல் தோல்வி:
ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக இருந்த முதல் தொடரிலேயே இந்திய அணிக்கு ஒரு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அயர்லாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் தோல்வியடைந்து இந்திய அணி பெரும் பின்னடைவைச் சந்தித்தது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் முதல் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. தற்போது, இந்திய அணி 2வது போட்டியிலும் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையின் கீழ் விளையாடிய முதல் 4 போட்டிகளில் ஒன்றில் கூட இந்தியாவால் வெற்றி பெற முடியவில்லை என்பது தெளிவாகிறது.




மோசமான சாதனை:
தனது முதல் 4 டி20 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறத் தவறிய, ஐசிசியின் முழு உறுப்பினர் நாட்டைச் சேர்ந்த 9வது கேப்டன் என்ற பெருமையை ஷ்ரேயாஸ் ஐயர் பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் உள்ள மற்ற குறிப்பிடத்தக்க கேப்டன்கள்…
- ஷகிப் அல் ஹசன் (வங்கதேசம்)
- எல்டன் சிகும்புரா (ஜிம்பாப்வே)
- பிரெண்டன் டெய்லர் (ஜிம்பாப்வே)
- திசரா பெரேரா (இலங்கை)
- மஹ்முதுல்லாஹ் (வங்கதேசம்)
- மேத்யூ வேட் (ஆஸ்திரேலியா)
- ஷஹீன் ஷா அஃப்ரிடி (பாகிஸ்தான்)
- முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்)
- ஷ்ரேயாஸ் ஐயர் (இந்தியா)
இந்திய அணியின் கேப்டன் ஒருவர் தனது அறிமுகத்திற்குப் பிறகு தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோற்பது இதுவே முதல் முறையாகும். அதாவது, ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனானதிலிருந்து இந்திய அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோற்றுள்ளது.
ALSO READ: க்ரீஸுக்கு சைடில் வைத்தாலும் நோ பால்.. ரவி பிஷ்னோய் செய்த தவறு என்ன..? ஐசிசி விதி கூறுவது என்ன?
மேலும், 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி தொடர்ச்சியாக மூன்று டி20 போட்டிகளில் தோல்வியடைவது இதுவே முதல் முறையாகும். இந்தத் தோல்விகளால் ஷ்ரேயாஸ் ஐயரின் அணிக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல், இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் 0-1 என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்துள்ளது.