AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மெட்ரோ ரயில் நிறுவனங்களின் பெயர்களை மாற்றிய தமிழக அரசு!

Metro Station Names Changed In Chennai | சென்னையில் உள்ள சில மெட்ரோ ரயில் நிலையங்களின் பெயர்களை தமிழக அரசு மாற்றம் செய்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த பெயர் மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மெட்ரோ ரயில் நிறுவனங்களின் பெயர்களை மாற்றிய தமிழக அரசு!
கோப்பு புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 06 Jul 2026 07:37 AM IST

சென்னை, ஜூலை 06 : சென்னையில் மெட்ரோ ரயில் (CMRL – Chennai Metro Rail) திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,  சில மெட்ரோ ரயில் நிலையங்களின் பெயர்களை தமிழக அரசு (Tamil Nadu Government) மாற்றம் செய்துள்ளது. மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த நிலையில், சென்னையில் உள்ள எந்த எந்த மெட்ரோ ரயில் நிலையங்களின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சென்னை கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி மெட்ரோ சேவை

சென்னையில் சில வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சென்னை கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை இடையே சுமார் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பூந்தமல்லி மற்றும் போரூர் இடையேயான சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் நிறைவடைந்து ரயில்கள் இயக்கப்பய தயார் நிலையில் உள்ளன.

இதையும் படிங்க : உயரமான பனைமரமும் இனி அசால்ட் தான்.. தந்தைக்கு உதவியாக மகன் செய்த நூதன முயற்சி.. தூத்துக்குடியில் விநோதம்!

நிறைவடையாத பணிகள் – முக்கிய நடவடிக்கை

பூந்தமல்லி மெட்ரோ ரயில் பாதையில் போரூர் முதல் வடபழனி வரை மெட்ரோ பணிகள் இன்னும் நிறைவடையாமல் உள்ளது. இந்த நிலையில் தான், போரூர் முதல் வடபழனி வரை எந்த ரயில் நிலையத்திலும் ரயிலை நிறுத்தாமல் இயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமன்றி, சில மெட்ரோ ரயில் நிலையங்களின் பெயர்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : ஹெல்மெட் அணிந்து வந்தால் கட்டா குஸ்தி 2 டிக்கெட் – தஞ்சாவீரில் வாகன ஓட்டிகளுக்கு இன்ப அதிர்ச்சி

பெய்ர மாற்றம் செய்யப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள்

அதன்படி, சாலிகிராமம் வேர் ஹவுஸ் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு விருகம்பாக்கம் தெற்கு மெட்ரோ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல, விருகம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு விருகம்பாக்கம் வடக்கு மெட்ரோ ரயில் நிலையம் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us