உயரமான பனைமரமும் இனி அசால்ட் தான்.. தந்தைக்கு உதவியாக மகன் செய்த நூதன முயற்சி.. தூத்துக்குடியில் விநோதம்!
Thoothukudi Ladder Constructed Palm Tree: தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 55 அடி உயர பனை மரத்தை தனது தந்தை ஏறுவதற்கு வசதியாக அவரது ரூ. 60 ஆயிரம் செலவில் மகன் ஏணி அமைத்துள்ளார். இந்த இளைஞரின் செயல் வைரலாகி வருகிறது.
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பனைத்தொழில் நடந்து வருகிறது. இதில், கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது பனைத் தொழில் வெகுவாக குறைந்துள்ளது. இருந்தாலும், கிராம பகுதிகளில் பனையேறிகள் மூலம் பதநீர், நுங்கு, கருப்பட்டி உள்ளிட்ட இயற்கை சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொழிலில் தற்போது சொற்ப அளவிலான தொழிலாளர்களே ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம், சாலைப்புதூர் கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பல தலைமுறைகளாக பனைத் தொழில் செய்து வருகின்றனர். இந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தற்போதும் பனைத் தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில், அவருக்கு தற்போது வயதாகி உள்ளது. இதன் காரணமாக, அவர் தனது வீட்டின் அருகே உள்ள குமார் 55 அடி உயரமுள்ள பனை மரத்தில் ஏற முடியாத சூழல் ஏற்பட்டது.
55 அடி உயர பனை மரத்தை சுற்றி ஏணிப்படி
இதனை கவனித்த அந்த நபரின் மகனான தினகர் பனைமரத்தின் உயரத்துக்கு ஏணிப்படி அமைக்க முடிவு செய்தார். அதன்படி, அவரது வீட்டின் அருகே உள்ள சுமார் 55 அடி உயரம் உள்ள பனைமரத்தை சுற்றிலும் ரூ.60 ஆயிரம் செலவில் ஏணிப்படி அமைத்துள்ளார். இது தொடர்பாக, தினகர் கூறுகையில், எனது தந்தை பல ஆண்டுகளாக பனைத் தொழில் செய்து வருகிறார். தற்போது, அவருக்கு வயதாகி விட்டது. இதன் காரணமாக பல அடி உயரம் உள்ள பனை மரத்தில் ஏறி இறங்க முடியாமல் போனது.
மேலும் படிக்க: தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி பேர வழக்கு.. அடுத்ததடுத்து கைதாகும் நபர்கள்.. திருவல்லிக்கேணி போலீசார் அதிரடி!




பாதுகாப்பாக மரம் ஏறி, இறங்க முடியும்
எனவே, எங்கள் வீட்டின் அருகே உள்ள பனைமரத்துக்கு ஏணி படி அமைக்க முடிவு செய்தேன். அதன்படி, தற்போது அந்த மரத்தை சுற்றிலும் ஏணிப்படி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எனது தந்தை பாதுகாப்பாக ஏன் இப்படி வழியாக மரத்தின் உச்சிக்கு சென்று, பதநீர், நுங்கு உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு பாதுகாப்பாக கீழே வந்தடைய முடியும். மரத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள ஏணிப்படி இரும்பு கம்பியால் வளைவு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
இளைஞரின் நூதன முயற்சிக்கு பாராட்டு
எனது தந்தைக்காக ஒரு புறம் இதை செய்திருந்தாலும், பனைத் தொழிலை பாதுகாக்கும் நோக்கில் இந்த முயற்சியை நான் முன்னெடுத்துள்ளேன் என்று தெரிவித்தார். இதனை அவரது கிராமத்தை சேர்ந்த பலரும் பாராட்டி உள்ளனர். பனைமரத்தின் உயரத்துக்கு சுற்றிலும் ஏணிப்படி அமைத்த இந்த நூதமான செயல் சமூக வலைதளங்களில் வீடியோவாகவும், புகைப்படமாகவும் வைரலாக பரவி வருகிறது.
மேலும் படிக்க: வாய்ப்பு தேடி ஓடும் ஓடுகாலி ஆதவ் அர்ஜுனா.. சட்ட நடவடிக்கை பாயும்.. கே.பி.முனுசாமி அதிரடி எச்சரிக்கை!