விவசாய பணிகளில் களமிறங்கிய வடமாநில தொழிலாளர்கள்.. சம்பளமும் குறைவாக வாங்குகின்றனராம்.. என்ன நடக்கிறது தஞ்சாவூரில்!
North Indian Worker Agricultural Work : தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்யும் பணிகளில் வட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அவர்கள் குறைந்த சம்பளத்தில் வேலை பார்ப்பதாக அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகின்றனர் .
தமிழகத்தில் கடந்த காலங்களில் கட்டட பணி, விவசாயம், தொழிற்சாலை பணிகள் உள்ளிட்டவற்றில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஈடுபட்டு வந்தனர். தற்போது, அந்த எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாகவே தெரிகிறது. ஏனென்றால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கட்டுமான பணி, தொழிற்சாலைகளில் உள்ள பணிகள், உணவகங்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்டவற்றில் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதுபோன்ற இடங்களில் எங்கு பார்த்தாலும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களின் தலைகளாகவே தெரிகிறது. அந்த வகையில், தற்போது விவசாய பணிகளில் மட்டும் வெளி மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபடாமல் இருந்து வந்தனர். இந்த பணிகளில் பெரும்பாலும் அந்தந்த பகுதிகளை சேர்ந்த மக்களை ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது அதற்கு மாற்றாக வெளி மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் களம் இறங்கி ( களம் இறக்கப்பட்டு) உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாய பணியில் வடமாநிலத்தவர்
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது குறுவை நெல் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை மேற்கொள்வதற்கு கடந்த சில ஆண்டுகளாகவே உள்ளூரை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளர்கள் போதிய அளவில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், தற்போது 125 நாள் வேலை பணிகள் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதால், அந்த பணிகளுக்கு ஏராளமான தொழிலாளர்கள் சென்று விடுகின்றனர். இதன் காரணமாக, மேற்கண்ட பகுதிகளில் நெல் நாற்றுகள் வளர்ந்து விட்ட நிலையில், விவசாயக் கூலி தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக நெல் நடவு பணி தொய்வு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ரூ.6 கோடி மதிப்பிலான தங்க நகைகளுடன் மாயமான ராஜஸ்தான் வியாபாரிகள்.. விமான நிலையத்தில் கைது செய்த போலீஸ்!




நடவு பணிக்கு உள்ளூர் தொழிலாளர்கள் பற்றாக்குறை
இதனால், தற்போது அய்யம்பேட்டை பகுதிகளில் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் நெல் நடவு பணியில் களம் இறக்கப்பட்டு தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், உள்ளூரை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக எவ்வாறு நடவு பணி மேற்கொள்வது என்று தவிப்பில் இருந்தோம்.
ரூ.5 ஆயிரமாக குறைந்த சம்பள செலவு
இதனால், வெளிமாநில தொழிலாளர்களை வைத்து நடவு பணி மேற்கொண்டு வருகிறோம். ஒரு ஏக்கருக்கு நாற்று பறிக்க மற்றும் நடவு செய்வதற்கு ரூ.7,000 சம்பள செலவு ஆகும் நிலையில், தற்போது ரூ.5,000 மட்டுமே வெளி மாநில தொழிலாளர்களுக்கு சம்பளமாக அளிக்கிறோம். இதனால், செலவு குறைவதுடன், உரிய நேரத்தில் நடவு பணிகளும் நடக்கிறது என்று தெரிவித்தனர்.
மேலும் படிக்க: கறுப்பு பிளாஸ்டிக் பையில் மனித எலும்புக்கூடு.. உளுந்தூர்பேட்டையை பரபரப்புக்கு உள்ளாக்கிய சம்பவம்!