AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கறுப்பு பிளாஸ்டிக் பையில் மனித எலும்புக்கூடு.. உளுந்தூர்பேட்டையை பரபரப்புக்கு உள்ளாக்கிய சம்பவம்!

Plastic Wrapped Human Skeleton Found | உளுந்தூர்பேட்டையில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பொதுவெளியில் கறுப்பு நிற பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில், மனித எலும்பு கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கறுப்பு பிளாஸ்டிக் பையில் மனித எலும்புக்கூடு.. உளுந்தூர்பேட்டையை பரபரப்புக்கு உள்ளாக்கிய சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 05 Jul 2026 12:34 PM IST

உளுந்தூர்பேட்டை, ஜூலை 05 : உளுந்தூர்பேட்டையில் (Ulundhurpet), பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்று அந்த மனித எலும்புக்கூட்டை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறனர். உளுந்தூர்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் கிடந்த மனித எலும்புக்கூடு

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புத்தனந்தல் கிராமத்தில் கெடிலம் ஆற்றின் கரையோரம் சுடுகாட்டில் கறுப்பு நிற பிளாஸ்டிக் பையில் சுற்றியபடி மனித எலும்புக்கூடு ஒன்று கிடந்துள்ளது. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதனை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளான நிலையில், உடனடியாக அது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் படி, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த எலும்புக்கூட்டை பார்வையிட்டு சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க : தமிழகத்தில் 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

எலும்புக்கூடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் போலீஸ்

ஆனால், அந்த எலும்புக்கூடு ஆணா, பெண்ண என்ற விவரம் தெரியவில்லை. அந்த எலும்புக்கூடு யாருடையது, யாரேனும் கொலை செய்யப்பட்டு, பல நாட்கள் கழித்து அவரின் எலும்புக்கூடு வீசப்பட்டுள்ளதா, எலும்புக்கூட்டை வீசியது யார், அந்த எலும்பு கூட்டின் பின்னணி என்ன என்கிற பல்வேறு கோணத்தில் போலீசார் தங்களது விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : தவெகவில் இணைந்த திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் – தமிழக அரசியலில் பரபரப்பு

பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய பகீர் சம்பவம்

மக்கள் நடமாட்டம் மிகுந்த, பொது வெளியில் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பேசுபொருளாக மாறியுள்ளது. எலும்புக்கூடு தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விரைவில் அதன் பின்னால் இருக்கும் கதை வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us