Pradeep Ranganathan: இயக்குநரா இல்ல தயாரிப்பாளரா? புது படம் குறித்து பிரதீப் ரங்கநாதன் வெளியிட்ட அப்டேட்!
Pradeep Ranganathans Big Announcement: தமிழில் இளம் நடிகராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் நடிப்பிலும், இயக்கத்திலும் தொடர்ந்து படங்கள் வெளியாகிவருகிறது. தற்போது இவரின் புதிய திரைப்படத்தின் குறித்த அப்டேட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அதுகுறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
கோலிவுட் சினிமாவில் வளர்ந்துவரும் நாயகனாக இருந்துவருபவர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan). இவர் இறுதியாக இயக்குநர் விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) இயக்கத்தில், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany) என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படமானது கடந்த 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில், மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இப்படத்திற்கு பின் பிரதீப் ரங்கநாதன் தனது இயக்கத்திலே புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனமானது தயாரிக்கவுள்ள நிலையில், இத பின்னணி பணிகள் நடைபெற்றுவருகிறதாம். இந்த படமானது பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்படகிவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் டியூட் பட தயாரிப்பு நிறுவனத்துடன் மேலும் புது படம் ஒன்றில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பதாகவும் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகிவருகிறது. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் தனது புதிய திரைப்படம் குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: அவரு இனிமே தளபதி இல்ல.. CM- சார்… முதல்வர் விஜய் குறித்து பேசிய கீர்த்தி சுரேஷ்!
புது படத்திற்காக அப்டேட்டை வெளியிட்ட பிரதீப் ரங்கநாதன் :
இயக்குனரும், நடிகருமான பிரபலமான பிரதீப் ரங்கநாதன் மேலும் புதிய பாதையை நோக்கி செல்கிறாராம். அவர் புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. அவர் தனது எக்ஸ் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து, “பிரதீப் ரங்கநாதனின் நெக்ஸ்ட் வேவ் ஆரம்பம்” என்றும், அதன் அப்டேட் 2026ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி காலை 10 மணியளவில் வெளியாகும் என அறிவித்துள்ளார். தற்போது இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிற்து.
புதிய படம் குறித்து பிரதீப் ரங்கநாதன் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
— Pradeep Ranganathan (@pradeeponelife) July 5, 2026
தயாரிப்பாளரா அல்லது இயக்குநரா:
பிரதீப் ரங்கநாதன், இயக்குநராகவும் நடிகராகவும் சிறப்பாக பணியாற்றிவருகிறார். அந்த விதத்தில் தற்போது அவர் தயாரிப்பாளராக புது அவதாரம் எடுக்கவுள்ளாராம். இவர் தயாரிக்கும் முதல் படத்தில் மமிதா பைஜூ நாயகியாக நடிக்க, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து முக்கியமான வேடத்தில் நடிக்கிறாராம்.
இதையும் படிங்க: ஜன நாயகன் பட ரிலீஸ் இந்த மாதத்தில் இருக்கும் – அப்டேட் கொடுத்த பிரியாமணி!
இதை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் இயக்குவதாக கூறப்படுகிறது. ஒருவேளை அதற்கான அப்டேட் நாளை (06/07/2026) வெளியாகலாம் என கூறப்படுகிறது. மேலும் அது பிரதீப் ரங்கநாதனின் புது படத்தின் அப்டேட்டாகவும் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. என்ன அப்டேட்டாக இருக்கும், பிரதீப் ரங்கநாதன் அடுத்த நிலைக்கு சொல்கிறார் என்பது குறித்து பொறுத்திருந்து பார்க்கலாம். நிச்சயம் இப்படமு இவருக்கு வரவேற்பை அளிக்கும் என கணிக்கப்படுகிறது.