எனக்கு கிடைக்கும் அனைத்து பாராட்டுகளுக்கும் ரவிமோகன் சார்தான் காரணம் – பிரதீப் ரங்கநாதன்
Pradeep Ranganadhan talks about Actor Ravi Mohan | தமிழ் சினிமாவில் பிரபல நடிகராவும் இயக்குநராகவும் வலம் வருவர் பிரதீப் ரங்கநாதன். இவர் சமீபத்தில் நடிகர் ரவி மோகன் குறித்து பேசியது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் தற்போது 100 கோடி வசூல் மன்னனாக வலம் வருபவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன். இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக வலம் வருகிறார். இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று மக்களிடையே பிரபலமாக்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் இயக்குநராக அறிமுகம் ஆன கோமாளி படத்தில் நடிகர் ரவி மோகன் நாயகனாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இரண்டாவதாக இயக்கிய லவ் டுவே படத்தில் அவரே நாயகனாக நடித்து இருந்தார். இந்த நிலையில் இயக்குநராக மட்டும் இன்றி நாயகனாகவும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றார் பிரதீப் ரங்கநாதன். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான படங்கள் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. ரொமாண்டிக் ட்ராமா பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் விருது வழங்கும் விழா ஒன்றில் நடிகர் ரவி மோகன் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




எனக்கு கிடைக்கும் அனைத்து பாராட்டுகளுக்கும் ரவிமோகன் தான் காரணம்:
பொதுவாக மேடையில் எனக்குப் பதற்றம் இருப்பதில்லை. ஆனால் இன்று ரவி மோகன் சாரிடமிருந்து விருதைப் பெறுவதால் எனக்குப் பதற்றமாக இருக்கிறது. வயது எவ்வளவு ஆனாலும், நம் தாய் நம்மை ஒரு குழந்தையாகவே பார்க்கிறார்; எனக்கும் அதே உணர்வுதான் இருக்கிறது. ‘கோமாளி’ படம் வெளியாகி 7 ஆண்டுகள் ஆகிவிட்டன, ஆனாலும் இப்போது ரவி சார் அழைக்கும்போது எனக்குப் பதற்றம் ஏற்படுகிறது. படப்பிடிப்புத் தளத்தில் எனது கதாபாத்திரத்திற்காகப் பலர் என்னைப் பாராட்டும்போது, அதற்குக் காரணமானவர் ரவி சார்தான் என்று பிரதீப் ரங்கநாதன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… இது மிகவும் ஸ்பெஷலான ஒரு வெற்றி… மா இண்டி பங்காரம் பட வெற்றி குறித்து சமந்தா பேச்சு
இணையத்தில் வைரலாகும் பிரதீப் ரங்கநாதன் பேச்சு:
#PradeepRanganathan today at Vikatan Awards:
“Usually I don’t feel nervous on stage. But today I’m because I’m getting Award from #RaviMohan sir😀. Even though how much aged we are, our mother sees us as a child. I have same feeling🥰. #Comali released before 7 Yrs, but when… pic.twitter.com/ReNL5gaKRb
— AmuthaBharathi (@CinemaWithAB) July 3, 2026
Also Read… இதயம் முரளி படத்தின் தமிழ் நாடு ரிலீஸ் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்