அரசன் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜாலியாக இருக்கும் சிம்பு – வைரலாகும் வீடியோ
Actor Silambarasan | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவர் அரசன் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வரும் நிலையில் தொடர்ந்து அவர் குறித்த செய்தி மற்றும் படம் குறித்த செய்திகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்து பிசியாக வலம் வரும் நாயகன்களுக்கு ரசிகர்கள் இருப்பது பெரிது அல்ல. படங்களிலேயே நடிக்கவில்லை, நடிக்கும் படங்கள் எல்லாம் தோல்வி, தொடர்ந்து நெகட்டிவான விமர்சனங்களைப் பெற்று வரும் நாயகனுக்காக காத்திருக்கும் ரசிகர்கள் தான் பெரிது. அப்படி திரையுலகில் உள்ள நடிகர்கள் எல்லாம் இப்படிப்பட்ட ரசிகர்களா உங்களுக்கு என்று பொறாமைப்படும் அளவிற்கு தனக்கு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருப்பவர்தான் நடிகர் சிலம்பரசன் (Actor Silambarasan). இவரது நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரிய அளவில் படங்கள் வெளியாகவில்லை. அப்படியே வெளியாகும் படங்களும் படுதோல்வி என்று தொடர் சரிவில் இருந்தார் சிலம்பரசன். ஆனால் அவரது ரசிகர்களோ எந்த இடத்திலும் அவரை விட்டுக்கொடுக்காமல் எங்களது தலைவன் கம்பேக் கொடுப்பான் என்று மிகுந்த நம்பிக்கையில் காத்து இருந்தனர்.
தனது ரசிகர்களின் நம்பிக்கையை வீணாக்காமல் ஒரு மாஸான கம்பேக்கை கொடுத்தார் நடிகர் சிலம்பரசன். அவரது கம்பேக் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலைலையில் தற்போது சமீப காலமாக நடிகர்கள் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் மாஸ் காட்டி வருகின்றது.




அரசன் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜாலியாக இருக்கும் சிம்பு:
இந்த நிலையில் நடிகர் சிலம்பரசன் தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அரசன் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. சமீபத்தில் ஒரு பெரிய ஷெடியூலை அரசன் படக்குழு முடித்தது தொடர்பான வீடியோவும் இணைனத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வந்தது.
இந்த நிலையில் நடிகர் சிலம்பரசன் அரசன் படப்பிடிப்பு தளத்தில் விஜய் டிவி பிரபலங்களான புகழ், ரக்ஷன் மற்றும் சரத் ஆகியோரை சந்தித்து அவர்களுடன் கலகலப்பாக உரையாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் சிம்பு அவர்களுடன் எவ்வளவு மகிழ்ச்சியாக பேசுகிறார் என்று அவரது ரசிகர்கள் சிலாகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read… 10 ஆண்டுகளைக் கடந்தது அப்பா படம்… சமுத்திரகனி வெளியிட்ட எக்ஸ் பதிவு
இணையத்தில் வைரலாகும் சிலம்பரசன் வீடியோ:
#SilambarasanTR having fun with Vijay TV Pugazh, Sarath and Rakshana at #Arasan Spot..💥pic.twitter.com/9UjaaYngih
— Laxmi Kanth (@iammoviebuff007) July 1, 2026
Also Read… அதர்வாவின் இதயம் முரளி படத்திலிருந்து வெளியானது கட்டழகி வீடியோ பாடல்