10 ஆண்டுகளைக் கடந்தது அப்பா படம்… சமுத்திரகனி வெளியிட்ட எக்ஸ் பதிவு
10 Years Of Appa Movie | சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாகவும் வலம் வருகிறார் நடிகர் சமுத்திரகனி. இவரது நடிப்பில் முன்னதாக வெளியான அப்பா படம் இன்றுடன் திரையரங்குகளில் வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி ரசிகர்களிடையே பிரபலமானவர் இயக்குநர் சமுத்திரகனி. தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குநராக வலம் வந்த அவர் தற்போது நடிகராக அதிக அளவில் படங்களில் நடித்து வருகிறார். படங்களை இயக்குவது விட்டுவிட்டு தொடர்ந்து நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் சமுத்திரகனி. இவர் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் மலையாளம் என தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் அதிக அளவில் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் சமுத்திரகனி. அதிலும் தமிழ் சினிமாவை தவிற மற்ற மொழிகளான மலையளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் அதிக அளவில் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார் நடிகர் சமுத்திரகனி. இவரது நடிப்பில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் நடிகர் சமுத்திரகனி நடிப்பில் தமிழ் சினிமாவில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 01-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் அப்பா. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சமுத்திரகனி உடன் இணைந்து நடிகர்கள் தம்பி ராமையா, நமோ நாராயணா, வினோதினி, வேல ராமமூர்த்தி, ஜே.விக்னேஷ், ராகவ், நசாத்,
கேப்ரியல்லா சார்ல்டன், பொரளி திலீபன், யுவஸ்ரீ லட்சுமி, அனில் முரளி, சாம் நாதன், பாபோஸ், பா.விஜய், யுகபாரதி, கலைகுமார், சசிகுமார் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.




10 ஆண்டுகளை நிறைவு செய்தது அப்பா படம்:
இயக்குநர் சமுத்திரகனி எழுதி இயக்கி நாயகனாக நடித்த இந்த அப்பா படம் குழந்தைகளை பெற்றோர்கள் எப்படி வளர்க்க வேண்டும் எப்படி வளர்க்க கூடாது என்பதை தெளிவாக காட்டி இருப்பார். இந்தப் படத்தில் நடிகர்களின் நடிப்பு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் நிலையில் சமுத்திரகனி ஒரு எக்ஸ் தள பதிவை வெளியிட்டுள்ளார். அதில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகும் அப்பா படம் தீயாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் சமுத்திரகனி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
10 ஆண்டுகளுக்கு பிறகும்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 pic.twitter.com/uNYfaYUg0y
— P.samuthirakani (@thondankani) July 1, 2026
Also Read… கண்களை விட்டு வந்திருக்கிறேன்… – மறைந்த கே.பாக்யராஜின் கையெழுத்துடன் வெளியான கடிதத்தால் சர்ச்சை