AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நோ சொன்ன ரஜினிகாந்த்… விக்ரமை நாடும் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி

Cibi Chakravarthi is going to narrate a story to Chiyaan Vikram | தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே சமீப காலமாக அதிகம் பேசப்பட்ட இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி. இவர் அடுத்ததாக எந்த நடிகரை இயக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

நோ சொன்ன ரஜினிகாந்த்… விக்ரமை நாடும் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி
சிபி சக்ரவர்த்திImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Jun 2026 18:29 PM IST

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த படம் டான். இந்தப் படத்தை இயக்குநர் சிபி சக்ரவரத்தி எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அவர் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. கல்லூரி காலத்தையும் இளைஞரின் வாழ்க்கையையும் மையமாக வைத்து உருவாகி இருந்த இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சில ஆண்டுகளாக படம் இயக்காமல் இருந்த நிலையில் அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று கோலிவுட் சினிமாவில் கிடைத்தது. அது என்ன என்றால் தலைவர் 173 படத்தை இயக்கும் வாய்ப்பு தான். இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்த நிலையில் சினிமா வட்டாரங்களில் ஒரு செய்தி பரவியது.

அதன்படி இந்த செய்தி குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எதையும் விளக்கம் கொடுக்கவில்லை. மாறாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைவர் 173 படத்தின் தொடக்க விழாவில் படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து என்றும் படத்தின் பெயர் தர்மன் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் அடுத்த ப்ளான் என்ன என்பது குறித்த கேள்வி ரசிகர்களிடையே இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

நோ சொன்ன ரஜினிகாந்த்… விக்ரமை நாடும் சிபி சக்ரவர்த்தி:

டான் போன்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தை இயக்கிய பிறகு, இயக்குநர் சிபி சக்கரவர்த்தி தனது அடுத்த படத்திற்கான திட்டத்தை இன்னும் இறுதி செய்யாத நிலையில் உள்ளார். அவர் பல நடிகர்களிடம் கதைகளை விவரித்துள்ளார். ரஜினிகாந்திடமும் ஒரு கதையைச் சொன்னார், ஆனால் அந்தத் திட்டம் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை. தற்போது, ​​அவர் சியான் விக்ரமிடம் ஒரு கதையைச் சொல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது. இத்திட்டம் உறுதியானால், சியான் 63-க்கு அடுத்ததாக இது சியான் 64-காக அமையக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

Also Read… Suriya48: சூர்யாவிற்கு ஜோடியாகும் கயாடு லோஹர்.. சூர்யா48 பட ஷூட்டிங் பூஜை புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Ajith Kumar: சினிமாவில் சம்பளத்தை குறைக்கும் அஜித் குமார்.. காரணம் இதுதானா?

Follow Us