சூர்யா – டி.ஜே.ஞனவேல் படத்தை உறுதி செய்தது தயாரிப்பு நிறுவனம்
Hombale Films will produce Suriya 48 Movie | நடிகர் சூர்யாவின் நடிப்பில் 48-வது படமாக உருவாக உள்ள படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்டை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே ஃபிலிம்ஸ் தங்களது எக்ஸ் தள பக்கத்தில் தற்போது வெளியிட்டு உள்ளது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் உச்ச நடிகராக வலம் வருகிறார் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் கருப்பு படம் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் விஸ்வநாத் & சன்ஸ். இயக்குநர் வெங்கி அட்லூரி இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ள நிலையில் வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 47-வது படத்திற்காக இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் சில நாட்களில் நிறைவடையும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் சூர்யாவின் நடிப்பில் 48-வது படமாக உருவாக உள்ள படம் தொடர்பான அப்டேட்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.




சூர்யாவின் 48-வது படத்தினை தயாரிக்கும் பிரபல நிறுவனம்:
இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாக உள்ள 48-வது படத்தை இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்க உள்ளார். இவர்களின் கூட்டணி இரண்டாவது முறையாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிக்கிறது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை கயடு லோஹர் நடிப்பதை உறுதி செய்துள்ளது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். தொடர்ந்து இரண்டாவது முறையாக சூர்யாவின் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… விஷ்ணு விஷால் – அருண்ராஜ் காமராஜின் அடுத்தப் படத்தின் கதை இதுதானா?
ஹோம்பலே பிலிம்ஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
The next chapter… #SuriyaXHombale
He built it.
Frame by frame. Film by film. Fight by fight.Roles that bled truth.
Characters that carried the weight of real lives.
A journey defined by courage, conviction, and craft.Three decades of truth on screen.
Countless hearts… pic.twitter.com/HoZOgQRbC7— Hombale Films (@hombalefilms) June 29, 2026
Also Read… மகேஷ் பாபுவின் வாரணாசி படத்தின் ஷூட்டிங் எபோது முடியும்? வைரலாகும் தகவல்