மகேஷ் பாபுவின் வாரணாசி படத்தின் ஷூட்டிங் எபோது முடியும்? வைரலாகும் தகவல்
Varanasi Movie Shooting Update | தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு. இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் வாரணாசி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போது முடிவடையும் என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பழம்பெரும் நடிகர் கிருஷ்ணாவின் மகன் தான் நடிகர் மகேஷ் பாபு. தனது தந்தை தெலுங்கு சினிமாவில் ஜாம்பவனாகா இருந்த காரணத்தால் மகேஷ் பாபு குழந்தை நட்சத்திரமாக கடந்த 1979-ம் ஆண்டு முதலே நடிக்கத் தொடங்கினார், அதன்படி தொடர்ந்து 1990-ம் ஆண்டு வரை குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நடிகர் மகேஷ் பாபு கடந்த 1999-ம் ஆண்டு முதல் படத்தில் நாயகனாக ஆக தெலுங்கு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் தெலுங்கு சினிமாவில் வருடத்திற்கு ஒரு படமாவது நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகும் படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
அந்த வகையில் நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் இறுதியாக தெலுங்கு சினிமாவில் வெளியான படம் குண்டூர் காரம். ஆக்ஷன் ட்ராமா பாணியில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் எழுதி இயக்கி இருந்தார். இந்தப்படம் கடந்த 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் நடிகர் மகேஷ் பாபு.




மகேஷ் பாபுவின் வாரணாசி படத்தின் ஷூட்டிங் எபோது முடியும்?
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்திற்கு வாரணாசி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வருகின்ற 2027-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்தப் படத்தில் நடிகர் மகேஷ் பாபு உடன் இணைந்து நடிகர்கள் பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் பிரியங்கா சோப்ரா இணைந்து நடித்து உள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் மாதத்தில் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
The shooting of #MaheshBabu‘s #Varanasi is scheduled to be completed by October. pic.twitter.com/lsX9nB7XqU
— Movie Tamil (@_MovieTamil) June 26, 2026
Also Read… மீண்டும் இணைந்த 96 பிரபல ஜோடி.. வெளியானது புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!