AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இப்படி ஒரு காதல் யாருக்குதான் பிடிக்காது… மலையாள சினிமாவில் ரொமாண்டிக் ட்ராமா பாணியில் உள்ள இந்த மதுரம் படத்தை மிஸ் செய்யாதீர்கள்!

Madhuram movie OTT Update | மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜோஜூ ஜார்ஜ். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அவரது மதுரம் படத்தை எந்த ஓடிடியில் பார்கலாம் என்று பார்ப்போம்.

இப்படி ஒரு காதல் யாருக்குதான் பிடிக்காது… மலையாள சினிமாவில் ரொமாண்டிக் ட்ராமா பாணியில் உள்ள இந்த மதுரம் படத்தை மிஸ் செய்யாதீர்கள்!
மதுரம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Jun 2026 20:29 PM IST

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் ஜோஜூ ஜார்ஜ். இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நாயகனாக நடித்த ரொமாண்டிக் ட்ராமா பாணியில் வெளியானது மதுரம் படம். இயக்குநர் அஹமது கபீர் இயக்கி உள்ள நிலையில் திரைக்கதையை ஆஷிக் ஐமார் மற்றும் ஃபஹீம் சஃபர் ஆகியோர் இணைந்து எழுதி இருந்தனர். மேலும் இந்தப் படத்தில் நடிகர் ஜோஜூ ஜார்ஜிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ராமச்சந்திரன் நடித்து இருந்தார். இவர்கள் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

அதன்படி நடிகர்கள் அர்ஜுன் அசோகன், இந்திரன், ஜாபர் இடுக்கி, ஜெகதீஷ், லால், ஃபாஹிம் சஃபர், நவாஸ் வல்லிக்குன்னு, மாளவிகா ஸ்ரீநாத், பாபு ஜோஸ், திருமலை ராமச்சந்திரன், ஸ்மினு சிஜோ, அம்ருதா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தை அப்பு பாத்து பப்பு புரொடக்ஷன் ஹவுஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர்கள் ஜோஜு ஜார்ஜ் மற்றும் சிஜோ வடக்கன் என இருவரும் இணைந்து தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜோஜூ ஜார்ஜின் மதுரம் படத்தை மலையாள சினிமாவில் மிஸ் செய்யாதீர்கள்:

வெளிநாட்டில் வேலை செய்துவரும் ஜோஜூ ஜார்ஜ் விடுமுறையில் சொந்த ஊருக்கு வருகிறார். அப்போது அவரது நண்பர்களை சந்திப்பதற்காக அங்கு உள்ள பிரியாணி கடைக்கு வருகிறார். அங்கு ஒரு வட நாட்டு பெண்ணான ஸ்ருதி ராமச்சந்திரன் சந்திக்கிறார். அந்த கடைக்கு அப்பளம் விற்க வரும் அவள் மீது காதல் வருகிறது ஜோஜூ ஜார்ஜிற்கு. இவர்கள் இருவரும் காதலித்த பெண் வீடிற்கு தெரிந்து பிரச்சனையாக பிறகு அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்து திருமணம் செய்துக்கொள்கிறார்கள்.

Also Read… Heartin: எதிர்பாராத டுவிஸ்ட்.. முக்கோண காதல் கதையில் ஒரு அழகான படம்.. மடோனா செபாஸ்டியனின் ஹார்டின் படம் எப்படி இருக்கு?

இப்படி இருக்கு சூழலில் ஸ்ருதி ராமச்சந்திரன் ஒரு விபத்தில் சிக்கி உடல் முழுவதும் பாரலைஸ் ஆகிறது. அவரை மருத்துவமனையிலேயே வைத்து பார்த்துக்கொள்ளும் ஜோஜூ ஜார்ஜ் அவரது மனைவியை எப்படி எல்லாம் உருகி உருகி காதலிக்கிறார் எப்படி பார்த்துக் கொள்கிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது சோனி லிவ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… Arjun Das: லோகேஷ் அப்படி பண்ணுவாருனு நா சாத்தியமா எதிர்பாக்கல – அர்ஜுன் தாஸ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

Follow Us