தமிழ் நாட்டில் மட்டும் கருப்பு படத்தின் மொத்த வசூல் இவ்வளவா? வைரலாகும் தகவல்
Karuppu Movie Box Office Collection | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான கருப்பு படம் இதுவரை தமிழ் நாட்டில் மட்டும் எத்தனை கோடிகள் வசூலித்தது என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த 2026-ம் ஆண்டு மே மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் கருப்பு. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து இருந்தார். இது நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான 45-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி எழுதி இயக்கி உள்ளார். மார்டன் சாமி படமாக உருவாகி இருந்த இந்தப் படத்தில் நடிகர் சூர்யா கருப்பு சாமியாக நடித்து இருந்தார். இவரது நடிப்பு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்தில் சூர்யாவின் நடிப்பை பார்த்த ரசிகர்கள் அவர் கருப்பு சாமியாகவே வாழ்ந்து உள்ளார் என்று கூறி வருகின்றது. மேலும் இந்தப் படம் நடிகர் சூர்யாவின் நடிப்பு கெரியரில் மிகவும் சிறந்த படமாக உள்ளது.
மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் சூர்யாவின் நடிப்பை போலவே நடிகர் இந்திரன்ஸ் நடிப்பும் இந்தப் படத்தில் வெகுவாகப் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது போல ஓடிடியிலும் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.




தமிழ் நாட்டில் மட்டும் கருப்பு படத்தின் மொத்த வசூல் இவ்வளவா?
இந்த கருப்பு படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் ரூபாய் 350 கோடிகளைக் கடந்த இந்த கருப்பு படம் தமிழ் நாட்டில் மட்டும் இதுவரை எத்தனை கோடிகள் வசூலித்துள்ளது என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த வகையில் கருப்பு படம் இதுரை ரூபாய் 191 கோடிகள் வசூலித்துள்ள நிலையில் வெற்றிகரமாக 7-வது வாரத்தில் நுழைந்துள்ளதையும் படக்குழு கொண்டாடி வருகின்றது. இது தற்போது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.
Also Read… கருப்பு படத்தில் கேமியோ செய்ததற்கு ஆர்யாவிற்கு நன்றி கூறிய ஆர்.ஜே.பாலாஜி
கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
🔥 THE ONE TAMIL NADU BOX OFFICE RAMPAGE! 🔥
A phenomenal milestone for The One @Suriya_offl’s #Karuppu! ❤️🔥
₹191+ CRORES GROSS in Tamil Nadu and the rampage continues in its 7th week💥
Thank you to every audience member for making this blockbuster celebration possible. 🙏… pic.twitter.com/n0PPtEKZZa
— Sakthi Film Factory (@SakthiFilmFctry) June 25, 2026
Also Read… தர்மன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு