Suriya: அட அட அப்போ தீபாவளிதான்.. சூர்யா47 படத்தின் டைட்டில் இதுவா? – வைரலாகும் தகவல்!
Suriya47 Title Update: கோலிவுட் சினிமாவில் அதிரடி நாயகனாக இருந்துவருபவர் சூர்யா. இவர் மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடித்துவரும் புது படம்தான் சூர்யா47. இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் எட்டிய நிலையில், தற்போது இப்படத்தின் டைட்டில் தொடர்பான தகவல்கள் இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.
கடந்த 2024ம் ஆண்டில் வெளியான ஆவேஷம் (Aavesham) என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் பிரபலமானவர் இயக்குநர் ஜித்து மாதவன் (Jithu Madhavan). இப்படத்தின் வெற்றியை அடுத்ததாக இவர் இயக்கிவரும் புது படம்தான் சூர்யா47 (Suriya47). இப்படத்தில் கோலிவுட் நாயகன் சூர்யா (Suriya) ஆக்ஷன் நாயகனாக நடிகராக நடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் ஜித்து மாதவன் இயக்க, சூர்யாவின் புது தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்துவருகிறது. இந்த படத்தில் சூர்யா அதிரடி போலீசாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை நஸ்ரியா நசீம் (Nazriya Nazim) நடித்துவருகிறார். இப்படமானது அதிரடி ரோமெண்டிக் மற்றும் ஆக்ஷ்ன் கதைக்களத்தில் தயாராகிவருகிறது.
இதன் ஷூட்டிங் முழுக்க கேரளா சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றுவரும் நிலையில், 85 சதவீதம் முடிவடைத்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது இப்படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: கார்த்தியின் அந்த சூப்பர் ஹிட் படத்தில் நான் தான் நடிக்க வேண்டியது – விஷ்ணு விஷால் சொன்ன உண்மைச் சம்பவம்
சூர்யா47 படத்தின் டைட்டில் இதுவா?:
இந்த படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாகவும், கொஞ்சம் நெகடிவ் வேடத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது. இதில் நஸ்ரியா நாயகியாக நடிக்க, பிரேமலு பிரபல நடிகர் நஸ்லென் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படமானது மலையாளம் மற்றும் தமிழ் என இருமொழி படமாக தயாராகிவருகிறது. இப்படத்திற்கு படக்குழு “சரவெடி” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: அப்பா அம்மா ஆயாச்சு… ஹேப்பி நியூஸ் சொன்ன தொகுப்பாளினி பிரியங்கா தேஷாபாண்டே!
சூர்யாவின் 47வது படத்தின் டைட்டில் குறித்து வைரலாகும் பதிவு:
Suriya – Jithu Madhavan film title buzz…
“SARAVEDI”💥🔥#Suriya47
— Christopher Kanagaraj (@Chrissuccess) June 23, 2026
சூர்யாவின் 47வது படத்தின் டைட்டில் எப்போது வெளியாகும்:
இப்படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் சுஷின் ஷயம் இசையமைக்க, பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துவருகின்றனர். இப்படமானது தமிழ் மற்றும் மலையாளம் மொழியை மையமாக கொண்டு இயக்கப்பட்டுவரும் மலையாள நடிகர்கள் இதில் பலரும் இருகிறார்கள். இப்படத்தில் ஆவேசம் படத்தில் நடித்த ஃபஹத் பாசில் கேமியோ வேடத்தில் நடிக்கவுள்ளார் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. மேலும் இப்படத்தின் டைட்டில் வரும் 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இத்துடன் இப்படத்தின் ரிலீஸ் தேதியும் உறுதி செய்யப்படுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.