Rajinikanth: என்ன டபுள் ட்ரீட்டுக்கு தயாரா? நாளை வெளியாகிறது ரஜினிகாந்தின் தலைவர் 173 பட டைட்டில்! இயக்குநர் யார்?
Thalaivar 173 Movie: உலகநாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிக்கவுள்ள திரைப்படம்தான் தலைவர் 173. இப்படத்தின் இயக்குநர்கள் இருமுறை அறிவிக்கப்பட்டு பின், அவர்கள் விலகினார். தற்போது இப்படத்தை மூன்றாவதாக இயக்குநர் யார் மற்றும் இப்படத்தின் டைட்டில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு எப்போது என படக்குழு அப்டேட் கொடுத்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Suparstar Rajinikanth) நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான படம் கூலி (Coolie). இதில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க, அவருடன் பான் இந்திய பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படமானது, ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதையடுத்து ரஜினி, இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் ஜெயிலர் 2 (Jailer 2) படத்தில் இணைந்திருந்தார். இப்படமானது சிறப்பாக தயாராகிவரும் நிலையில், இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் உள்ளது. இப்படத்திற்கு பின் நடிகர் கமல்ஹாசனின் (Kamal Haasan) ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் ரஜினி நடிக்க ஒப்புக்கொண்ட படம்தான் தலைவர் 173 (Thalaivar 173). இப்படத்தின் இயக்குநர்கள் இருமுறை அறிவிக்கப்பட்டு பின் அவர்கள் விலகினார்.
தற்போது இப்படத்தின் இயக்குநர் யார் மற்றும் இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு எப்போது வெளியாகும் என படக்குழு அப்டேட் கொடுத்துள்ளது. தலைவர் 173 படத்தின் புது இயக்குநர் யார் மற்றும் படத்தின் டைட்டில் என்ன என்பது குறித்த அறிவிப்பு 2026ம் ஜூன் 24ம் தேதியில் காலை 10 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.




இதையும் படிங்க: தலைவர் 173 படத்திற்காக அஸ்வத் மாரிமுத்துவிடம் கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்
தலைவர் 173 படத்தின் இயக்குநர் மற்றும் டைட்டில் அறிவிப்பு குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
One Name
Forever a CelebrationTitle Reveal tomorrow at 10:00 AM#Thalaivar173 #SuperstarRajinikanth #KamalHaasan @rajinikanth @ikamalhaasan #Mahendran
@rkfioffl @turmericmedia @magizhmandram pic.twitter.com/GlR5JC8RW0
— Raaj Kamal Films International (@RKFI) June 23, 2026
யார் இந்த அஸ்வத் மாரிமுத்து:
ரஜினியின் தலைவர் 173 படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்குவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இவர் கடந்த 2020ம் ஆண்டில் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங்கின் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக நுழைந்தார். இப்படமானது அவருக்கு எதிர்பாராத வெற்றியை கொடுக்கவே, கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயக்கி வெளியிட்ட படம் டிராகன்.
இதையும் படிங்க: 3 ஆண்டுக்கு பின் சமந்தாவின் மாஸ் கம்பேக்.. 4 நாட்களிலே ரூ 50 கோடி வசூலித்த எங்கள் தங்கம் திரைப்படம்!
இதில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருந்த நிலையில் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. இப்படத்தின் வெற்றிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியே அவரை நேரில் அழைத்து வாழ்த்தியிருந்தார். தற்போது தனது இயக்கத்தில் 3வது உருவாகும் படத்தை, சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கவுள்ளார்.
தலைவர் 173 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்:
தலைவர் 173 படத்தின் ஷூட்டிங் பணியானது ஏற்கனவே சென்னையில் சில நாட்களாக நடைபெற்றுவந்தது. ஆனால் அதில் ரஜினிகாந்த் இணையவில்லையாம். அந்த வகையில் தற்போது அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், விரைவில் ரஜினி இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் டாக்டராக நடிக்கவுள்ளாராம். மேலும் இவருடன் யார் யார் நடிக்கிறார்கள் என படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.