அடையாளம் தெரியாமல் இருக்கும் சிறுமி யாருனு தெரியுமா? ஒரு கிண்டலால் அழகாக மாறிய நடிகை இவர்! அட இவர்தாங்க!
Malayalam Actress Old Photo : தென்னிந்திய சினிமாவில் பல உச்ச நடிகைகள் இருந்துவருகின்றனர். அவர்களின் அடையாளம் தெரியாத அல்லது சினிமாவிற்கு முந்தய போட்டோக்கள் வெளியாகி வைரலாகிவரும். அந்த விதத்தில் இந்த போட்டோவில் கொஞ்சம் குண்டாக இருப்பது எந்த நடிகை-னு பார்க்கலாம்.
சவுத் இந்திய சினிமாவில் பல நடிகைகள் இருக்கிறார்கள் (South Indian Actress). முன்புள்ள காலத்தை போல நடிகைகள் வெறும் இரு மொழி படங்களில் மட்டும் நடிப்பதல்ல. அவர்கள் தற்போது பான் இந்திய மொழி படங்களிலும் நடித்து தங்களின் திறமையை ஒட்டுமொத்த இந்திய அளவிலும் காண்பித்து வருகின்றனர். அவ்வாறு சில நடிகைகளின் அடையாளம் தெரியாத அல்லது சினிமாவிற்கு முந்தைய அரிதான படங்கள் இணையத்தில் வைரலாகிவரும். அந்த விதத்தில் மேலே உள்ள போட்டோவில் குண்டாக, அடையாளம் தெரியாமல் இருக்கும் நடிகை யார் தெரியுமா?. இவர் பிரபல மலையாள இயக்குநரின் மகள் (Malayalam Director daughter). மலையாள சினிமா இயக்குநரின் மகளான இவர், தெலுங்கு சினிமாவின் (Telugu Cinema) மூலமாகவே நடிகையாக அறிமுகமானார்.
அதன் பிறகு மலையாளம் மற்றும் தமிழ் போன்ற மொழி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துவந்தார். மேலும் இவர் கடந்த 2025ம் ஆண்டில் ஒரு சூப்பர் ஹீரோ படத்தில் நடித்து இந்திய முழுவதும் பிரபலமானார். மேலும் தமிழில் இவர் சிலம்பரசன் முதல் கார்த்தி போன்ற நடிகர்களுடன் படங்களில் இனைந்து நடித்திருக்கிறார். அடங இந்த நடிகை வேறுயாருமில்லை, கல்யாணி பிரியதர்ஷன்தான்.




இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் பட ஆரம்பகட்ட நடிகர்கள் தேர்வில் நானும் இருந்தேன் – ஆர்யா உடைத்த உண்மை!
நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் இன்ஸ்டாகிடம் போட்டோஸ் பதிவு:
View this post on Instagram
நடிகை கல்யாணி பிரியதர்ஷன், தென்னிந்திய மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவர் பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷனின் மகள். இவர் கடந்த 2017ம் ஆண்டில் வெளியான ஹலோ என்ற படத்தின் மூலம் தெலுங்கில் நாயகியாக அறிமுகமானார். இதில் நாகார்ஜுனாவின் 2வது மகன். அகிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து தொடர்ந்து 2 படங்களில் தெலுங்கில் நடித்தார். பின் தனது 4வது படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அவர் அறிமுகமான முதல் படம் ஹீரோ. இதில் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் இவருக்கு இந்த படம் எதிர்பாராத வரவேற்பைக் கொடுக்கவில்லை.
இதையும் படிங்க: என்னோட ஆக்சிஜனே தமிழ் ரசிகர்கள்தான்.. நூறு சாமிக்கு கிடைத்த வரவேற்பிற்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த ஸ்வாசிகா!
இதையடுத்து இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை கொடுத்த படம்தான் மாநாடு. இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில், வெளியான இப்படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட்டாக அமைந்திருந்தது. இப்படத்தை அடுத்ததாக இவர் தமிழில் மார்ஷல் மற்றும் ஜீனி போன்ற படங்களில் நாயகியாக நடித்துவருகிறார். மேலும் இவரின் நடிப்பில் கடந்த 2025ம் ஆண்டில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றபடம் லோகா. இதில் அதிரடி சூப்பர் ஹீரோவாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.