AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்த போட்டோவில் பாரதிராஜாவின் கையில் இருக்கும் சிறுவன் யாருனு தெரிகிறதா? இவர் தற்போது தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோ!

tamil Actor childhood photo: சினிமாவை பொறுத்தவரை பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் மற்றும் அவர்களின் அடையாளம் தெரியாத புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவரும். இந்நிலையில் இந்த போட்டோவில் இயக்குநர் பாரதிராஜாவின் கையில் இருக்கும் சிறுவன் எந்த நடிகர் என தெரியுமா?. அதுகுறித்து விவரமாக பார்க்கலாம்.

இந்த போட்டோவில் பாரதிராஜாவின் கையில் இருக்கும் சிறுவன் யாருனு தெரிகிறதா? இவர் தற்போது தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோ!
தமிழ் நடிகரின் குழந்தைப் பருவப் புகைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 13 Jun 2026 08:41 AM IST

இணையதளங்களின் வளர்ச்சியை தொடர்ந்து சினிமாவில் எந்த படம் உயரவேண்டும், எது ஓடக்கூடாது என முடிவு செய்வதே சோஷியல் மீடியாவாகவே மாறிவிட்டது. இந்த இணையத்தில் நடிகர்கள் மற்றும் சினிமா பிரபலன்களின் அடையாளம் தெரியாத குழந்தை பருவ புகைப்படங்கள் மற்றும் இதுவரை பார்த்திடாத புகைப்படங்கள் வைரலாகிவருகிறது. இந்நிலையில் மேலே இருக்கும் போட்டோவில் இயக்குநர் பாரதிராஜாவின் (Director Bharathiraja) கையில் அமர்ந்திருக்கும் சிறுவன் யார் என தெரிகிறதா?. இவர் தற்போது தமிழ் சினிமாவின் லீட் நடிகர் (Tamil Cinema Actor). இந்த சிறுவனின் தந்தையும் தமிழில் இயக்குநராக, நடிகராக மற்றும் பாடகராகவும் பணியாற்றியவர். இந்த சிறுவன் தற்போது தமிழில் முன்னணி இயக்குநர்களின் இயக்கத்தில் படங்களில் நடித்துவருகிறார். இவர் தனது சிறுவயதிலிருந்தே சினிமாவில் இருந்துவரும் நிலையில், கடந்த 2002ம் ஆண்டில் ஹீரோவாக சினிமாவில் அறிமுகமானார்.

தற்போது கிட்டத்தட்ட 24 வருடங்களுக்கும் மேலாக ஹீரோவாகவே படங்களில் நடித்துவருகிறார். இவர் பிரபல நடிகையை காதலித்த நிலையில், இவர்கள் இருவரின் காதல் கைகூடவில்லை. தற்போதுவரையிலும் திருமணமாகாமல் இருக்கிறார். இப்போது இந்த சிறுவன் யார் என தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். அட இந்த சிறுவன் வேறுயாருமில்லை, நடிகர் சிலம்பரசன்தான் (Silambararasan TR).

இதையும் படிங்க: கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றி.. சர்ப்ரைஸாக இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜிக்கு காரை பரிசளித்த சூர்யா!

இயக்குநர் பாரதிராஜா குறித்து சிலம்பரசன் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

சிலம்பரசனின் சினிமா வாழ்க்கை :

நடிகர் சிலம்பரசன் கடந்த 1984ம் ஆண்டில் உறவைக் காத்த கிளி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானார். 1983ம் ஆண்டில் பிறந்த இவர், தனது ஒரு வயதிலிருந்தே தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். இதையடுத்து தனது தந்தையான டி.ராஜேந்தரின் இயக்கத்தில் உருவாகிவந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமாக தொடங்கினர். குழந்தை நட்சத்திரமாகவே கிட்டத்தட்ட 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து 2002ம் ஆண்டில், இயக்குநர் டி.ராஜேந்தரின் இயக்கத்தில் வெளியான “காதல் அழிவதில்லை” என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். இதில் தெலுங்கு நடிகை சார்மிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

இதையும் படிங்க: கிடா பட இயக்குநருடன் புதிய படத்தில் இணைந்த நடிகர் ஜீவா – வெளியான அறிவிப்பு இதோ!

இதையடுத்து மற்ற இயக்குநர்களின் படங்களிலும் சிலம்பரசன் நடிக்க தொடங்கியிருந்தார். ஹீரோவாக அறிமுகமான சில வருடங்களில் படங்களை இயக்கம் ஆர்வமும் கொண்டார். மன்மதன் படத்தை இயக்குநர் ஏ.ஜே. முருகனுடன் சிலம்பரசனும் இணைந்து இயக்கியிருந்தார். இதையடுத்து வல்லவன் என்ற படத்தை முழுவதாகவும் இவரே இயக்கியிருந்தார். இவ்வாறு சினிமாவில், நடிகர், இயக்குனர், பாடகர் மற்றும் தயாரிப்பாளர் என அடுத்தடுத்த பணிகளை சிறப்பாக செய்துவருகிறார் சிலம்பரசன். தற்போது வெற்றிமாறனின் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us