Double Occupancy: 12 மணிநேரம் ஆண்.. 12 மணிநேரம் பெண்.. டபுள் டமாக்கவான டபுள் ஆக்குபென்சி படம் எப்படி இருக்கு?- விமர்சனங்கள் இதோ!
Double Occupancy Movie Review: தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன் படத்தில் இளம்பருவ ஆதித்ய கரிகாலன் வேடத்தில் நடித்த ரசிகர்களை கவர்ந்தவர் சந்தோஷ் ஸ்ரீராம். இவர் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள புதிய படம்தான் டபுள் ஆக்குபென்ச. இப்படம் இன்று (12/06/2026) முதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், இதன் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.
கோலிவுட் சினிமாவில் இயக்குநர் மணி ரத்னத்தின் (Mani Ratnam) இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் (Ponniyin Selvan) படத்தில், சியான் விக்ரம் நடித்த கரிகாலன் வேடத்தில் இளம் கரிகாலனாக நடித்தவர் சந்தோஷ் ஸ்ரீராம் (Santhosh Sreeram). இவர் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிலையில், குறைவான நேரத்தில் படத்தில் நடித்திருந்தாலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் இதையடுத்து தமிழில் தற்போது இவர் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள திரைப்படம்தான் டபுள் ஆக்குபென்சி (Double Occupancy). இப்படத்தை இயக்குநர் அஸ்வின் கந்தசாமி (Aswin Kandhasamy) இயக்கியுள்ள நிலையில், குஷ்புவின் (khushbu) அவினி சினிமாஸ் நிறுவனமானது இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் சந்தோஷ் ஸ்ரீராம், விடிவி கணேஷ் (VTV Ganesh) , வினோத் கிஷன், சம்யுக்தா விஸ்வநாத் (Samyuktha Viswanathan) மற்றும் ரேஷிமா வெங்கடேஷ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
பேண்டஸி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படமானது இன்று 2026ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு மக்கள் கொடுத்த விமர்சனங்கள் குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக நுழையும் பரிமளா & கோ படம் – மகிழ்ச்சியில் படக்குழு
டபுள் ஆக்குபென்சி திரைப்படத்தின் கதை எப்படி இருக்கு:
#DoubleOccupancy – 3.5/5
2nd half-ல வந்த twist & turns எல்லாமே super!💥
All characters Performance படத்துக்கு பெரிய plus👏🏻
BGM’s வேற level 🔥
Funeral scene touching-அ இருந்துச்சு
அந்த climax twist unexpected😯👌🏻@AvniCinemax_ @aswin_tweet pic.twitter.com/U3vkxdBeET
— Gowtham (@leo_gowtham_3) June 12, 2026
இப்படத்தில் நடிகர் சந்தோஷ் ஸ்ரீராம் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். இப்படத்தில் அவர் ரஜினி என்ற வேடத்தில் நடித்துள்ள நிலையில், காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பெண்ணாகவும், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஆணாகவும் இருக்கும் ஒரு நபராக இருக்கிறார். இப்படத்தில் ஆணாக இருக்கும் ரஜினியை நடிகை சம்யுக்தா விஸ்வநாத்தை காதலிக்கிறார். பெண்ணாக இருக்கும் ரஜினியை வினோத் கிஷன் காதலிக்கிறார். இவ்வாறு ஒரே ஆள் 12 மணி நேரம் ஆணாகவும், 12 மணி நேரம் பெண்ணாகவும் எவ்வாறு தனது வாழ்க்கையை நடத்திவருகிறார் என்ற ஒரு பேண்டஸி கதைக்களத்தில் இப்படம் உள்ளது.
இதையும் படிங்க: கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றி.. சர்ப்ரைஸாக இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜிக்கு காரை பரிசளித்த சூர்யா!
டபுள் ஆக்குபென்சி படத்தில் இயக்குநர் மற்றும் இசையமைப்பாளரின் அட்டாகாசம்:
இப்படத்தின் மூலம் வித்தியாசமான கதைக்களத்தை மக்களிடையே கொண்டு சேர்த்திருக்கிறார் இயக்குநர் அஸ்வின் கந்தசாமி. இப்படமானது சிறப்பான மற்றும் வித்தியாசமான கதையில் அமைந்துள்ள நிலையில், படத்தின் மீது மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. மேலும் இப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களை இசையமைப்பாளர் சாம் சி எஸ் சிறப்பாக செய்துள்ளார்.
டபுள் ஆக்குபென்சி படத்தை திரையரங்கு சென்று பார்க்கலாமா:
இப்படமானது விடிவி கணேஷின் காமெடி, நடிகர் சந்தோஷின் நடிப்பு மற்றும் இயக்குநர் கந்தசாமியின் கைவண்ணம் என படமே சிறப்பாக உள்ளது. மேலும் இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் எதிர்பாராத திருப்பம் இருக்கிறதாம். இப்படத்தை காதலர்களாக மற்றும் சிங்கிளாக திரையரங்குகளில் சென்று பார்க்க நல்ல படம். இப்படத்தில் 18+ காட்சிகள் சில இருக்கும் நிலையில், குழந்தைகளை அழைத்து செல்வதை தவிர்க்கலாம். மற்றபடி பேண்டஸி மற்றும் காமெடி படத்தை பார்க்க நினைகிறவர்களுக்கு டபுள் ஆக்குபென்சி ஒரு நல்ல படமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.