இன்று திரையரங்குகளில் வெளியான ஹபீபி படம் எப்படி இருக்கு? மக்களின் கருத்து இதோ
Habeebi Movie X Review Here | தமிழ் சினிமாவில் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் ஹபீபி. இஸ்லாமியர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் ரசிகர்களின் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் இன்று பலப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அந்த வரிசையில் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்ற படம் ஹபீபி. இயக்குநர் மீரா கதிரவன் இந்தப் படத்தை இயக்கி உள்ள நிலையில் கதையை வி.எஸ். முகமது அமீன் எழுதியுள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் கஸ்தூரி ராஜா, ஈஷா, மாளவிகா மனோஜ், அருள்குமார், தனஸ்ரீ சுதாகரன், அனுஸ்ரேயா ராஜன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை மையமாக வைத்து இந்தப் படத்தை எடுத்து உள்ளனர். ஃபீல் குட் பாணியில் இன்று 12-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் ஹபீபி படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர். அதனை தற்போது பார்க்கலாம்.
ஹபீபி படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ:
Saw #Habeebi, a deeply rooted film that depicts the pain and suffering of Islam youngsters who had to move to Arab countries to yield wealth. They are forced to miss their family, love and sometimes their prime age for the sack of earning money! Also, the cultural background of… pic.twitter.com/iYQEpzMYa7
— Rajasekar (@sekartweets) June 11, 2026
‘ஹபீபி’ திரைப்படத்தைப் பார்த்தேன். செல்வம் ஈட்டுவதற்காக அரபு நாடுகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளான இஸ்லாமிய இளைஞர்களின் வலியையும் துயரத்தையும் இப்படம் ஆழமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. பணம் சம்பாதிப்பதற்காக அவர்கள் தங்கள் குடும்பம், காதல் மற்றும் சில சமயங்களில் தங்கள் இளமைப் பருவத்தையே கூட இழக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்! மேலும், இதில் காட்டப்பட்டுள்ள இஸ்லாமியர்களின் கலாச்சாரப் பின்னணி மிகவும் புதுமையானதாகவும், இதுவரை அதிகம் ஆராயப்படாத ஒன்றாகவும் அமைந்துள்ளது.
ஹபீபி படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ:
#ஹபீபி #habeebi 4/5
தமிழ் சினிமாவில் மீண்டும் ஒர் தரமான, நேர்மையான படைப்பு. இஸ்லாமிய குடும்ப வாழ்க்கை முறை, அவர்களின் பாசம், தியாகம், காதலை இப்படி எந்த தமிழ் படமும் காண்பித்தது இல்லை. படம் பார்ப்பவர் பல இடங்களில் கண் கலங்காமல் இருக்க முடியாது. இயக்குனர் மீரா கதிரவன்,… pic.twitter.com/9MlMkWqJBZ— Meenakshi Sundaram (@meenakshinews) June 11, 2026
தமிழ் சினிமாவில் மீண்டும் ஒர் தரமான, நேர்மையான படைப்பு. இஸ்லாமிய குடும்ப வாழ்க்கை முறை, அவர்களின் பாசம், தியாகம், காதலை இப்படி எந்த தமிழ் படமும் காண்பித்தது இல்லை. படம் பார்ப்பவர் பல இடங்களில் கண் கலங்காமல் இருக்க முடியாது. இயக்குனர் மீரா கதிரவன், படக்குழுவுக்கு வாழ்த்துகள்
ஹபீபி படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ:
#Habeebi Review [⭐️⭐️⭐️⭐️/5] ❤️
A soulful romantic-family drama rooted in the lives, emotions and silent struggles of Tamil Muslims in Southern TN.
Beyond love, the film beautifully touches upon the emotional void and family separation faced by those leaving for Gulf countries.… pic.twitter.com/7xo7fthQTT
— EDISON AWARDS (@edison_awards) June 11, 2026
ஹபீபி என்பது தென்தமிழ்நாடுகளில் வாழும் தமிழ் முஸ்லிம்களின் வாழ்க்கை, உணர்வுகள் மற்றும் மௌனப் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு உணர்வுப்பூர்வமான காதல்-குடும்ப நாடகம். காதலையும் தாண்டி, வளைகுடா நாடுகளுக்குச் செல்பவர்கள் எதிர்கொள்ளும் உணர்வுப்பூர்வமான வெற்றிடத்தையும் குடும்பப் பிரிவையும் இப்படம் அழகாகத் தொட்டுக்காட்டுகிறது.
ஹபீபி படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ:
#Habeebi [4/5] : A Fine Romantic / Family drama with Tamil Muslims backdrop in Southern TN..
Talks about family separation of those who go to Gulf..
The story travels in different time periods..#DirectorKasthuriRaja has lived his role
The leads @esha_actor #Malavikamanoj… pic.twitter.com/A4XzGQnuT4
— Ramesh Bala (@rameshlaus) June 11, 2026
ஹபீபி, தென்தமிழ்நாடு தமிழ் முஸ்லிம்களின் பின்னணியில் அமைந்த ஒரு அருமையான காதல் மற்றும் குடும்ப நாடகம். வளைகுடா நாடுகளுக்குச் செல்பவர்களின் குடும்பப் பிரிவைப் பற்றிப் பேசுகிறது. கதை வெவ்வேறு காலகட்டங்களில் பயணிக்கிறது. இயக்குனர் கஸ்தூரி ராஜா தனது கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியுள்ளார்.
ஹபீபி படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ:
#Habeebi – Film portrays d life of Muslim Community in diffrnt timelines; 1st of its kind in Tamil Cinema. Showcases their Culture Customs, Beliefs, traditions & uniq Dialect Beautifully. Neat Perf, Music. Though Melodramatic & Familiar Luv Track, its Nice to Watch. GOOD Attempt!
— Christopher Kanagaraj (@Chrissuccess) June 11, 2026
‘ஹபீபி’ (Habeebi) திரைப்படம் முஸ்லிம் சமூகத்தின் வாழ்க்கையை வெவ்வேறு காலகட்டங்களில் சித்தரிக்கிறது. தமிழ் சினிமாவில் இது ஒரு புதிய முயற்சி. இவர்களின் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், மரபுகள் மற்றும் தனித்துவமான பேச்சுவழக்கு ஆகியவற்றை இப்படம் அழகாக வெளிப்படுத்துகிறது. நேர்த்தியான நடிப்பு மற்றும் இசை. மிகை உணர்ச்சிகள் மற்றும் வழக்கமான காதல் கதைக்களம் கொண்டதாக இருந்தாலும், படம் பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. ஒரு நல்ல முயற்சி!
Also Read…
ஹபீபி படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ:
#HabeebiReview
My Rating 4.5/5இப்படத்தை திரைப்படக் கல்லூரி மாணவர்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். இது ஒரு நல்ல படமும், நாணயமான பாடமும் கூட. ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு நேர்த்தியாகவும், நேர்மையாகவும் இருக்கிறது.
Fantastic reviews pouring for #Habeebi from the Press Show ♥️🤌🏼… pic.twitter.com/r8ye2y4fRl
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) June 11, 2026
இப்படத்தை திரைப்படக் கல்லூரி மாணவர்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். இது ஒரு நல்ல படமும், நாணயமான பாடமும் கூட. ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு நேர்த்தியாகவும், நேர்மையாகவும் இருக்கிறது.
Also Read… சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்திற்கு தணிக்கை குழு கொடுத்த சான்றிதழ் – வைரலாகும் அப்டேட்



