சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்திற்கு தணிக்கை குழு கொடுத்த சான்றிதழ் – வைரலாகும் அப்டேட்
Maa Inti Bangaaram Movie Censor Update | தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் மா இண்டி பங்காரம். இந்தப் படத்தின் சென்சார் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா ரூத் பிரபு அவ்வபோது இந்தி மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறர். இவர் அதிக அளவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் படங்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் சினிமாவில் ஒரு சின்ன கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தாலும் தெலுங்கு சினிமாவில் வெளியான படத்தின் மூலமாகதான் நாயகியாக நடிக்கத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்கள் பலருக்கு ஜோடியாக நடித்துள்ளார் நடிகை சமந்தா ரூத் பிரபு. தமிழ் சினிமாவில் இவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த படங்கள் பல சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அதிக அளவில் கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நடிகை சமந்தா ரூத் பிரபு ஒரு தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கி உள்ளார். தொடர்ந்து படங்களை தயாரிப்பது மட்டும் இன்றி மீண்டும் நடிக்கவும் தொடங்கி உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக் குறைவு காரணமாக நடிக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மா இண்டி பங்காரம் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது:
நடிகை சமந்தா ரூத் பிரபு கதையின் நாயகியாக நடித்துள்ள படம் மா இண்டி பங்காரம். ஃபேமிலி ஆக்ஷன் காமெடி பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தை இயக்குநர் பி.வி.நந்தினி ரெட்டி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகை சமந்தா உடன் இணைந்து நடிகர்கள் குல்ஷன் தேவையா, திகந்த் மஞ்சலே, கௌதமி தடிமல்லா, ஸ்ரீ முகி, மஞ்சுஷா, ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, ஆனந்த் லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் திரையரங்குகளில் வருகின்ற 19-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்தப் படத்திற்கு தற்போது சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது. அதில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Also Read… அடியே அழகே என் அழகே அடியே… 10 ஆண்டுகளை நிறைவு செய்தது ஒரு நாள் கூத்து படம்
மா இண்டி பங்காரம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#MaaIntiBangaaram certified U/A ❤🔥
A complete family entertainer with a fresh twist 💥
Bring your bangaaralu and join us in cinemas worldwide from June 19th, 2026.
Tamil Nadu, Kerala and Karnataka theatrical release by @ThinkStudiosInd#MiBonJune19@TralalaPictures… pic.twitter.com/8JlfSjP1Ne
— Think Studios (@ThinkStudiosInd) June 11, 2026
Also Read… பாரதிராஜாவின் மறைவு… படங்களில் அப்டேட்டை ஒத்திவைத்த மகுடம், மண்டாட்டி படக்குழுவினர்!

