AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாரதிராஜாவின் மறைவு… படங்களில் அப்டேட்டை ஒத்திவைத்த மகுடம், மண்டாட்டி படக்குழுவினர்!

Magudam and Mandaadi movies updates postponed | தமிழ் சினிமாவில் பழம்பெரும் இயக்குநராக வலம் வந்த பாரதிராஜா இன்று உயிரிழந்த நிலையில் தமிழ் சினிமாவில் வெளியாவதாக இருந்த அப்டேட்களை படக்குழுவினர் ஒத்தி வைத்துள்ளனர். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பாரதிராஜாவின் மறைவு… படங்களில் அப்டேட்டை ஒத்திவைத்த மகுடம், மண்டாட்டி படக்குழுவினர்!
பாரதிராஜாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Jun 2026 18:45 PM IST

தமிழ் சினிமாவில் இன்று இயக்குநர் இமயம் என்று மக்களால் கொண்டாடப்படும் இயக்குநர் பாரதிராஜா உடல் நலக் குறைவு காரணமாகவும் வயது மூப்பின் காரணமாகவும் உயிரிழந்தார். இவரது இழப்பு தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் பல சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் படங்களை இயக்கியவர் இயக்குநர் பாரதிராஜா. மேலும் தமிழ் சினிமாவில் 16 வயதினிலே என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் இயக்குநர் பாரதி ராஜா. இந்தப் படத்திற்கு பிறகுதான் நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் என இருவரின் சினிமா வாழ்க்கையும் அடுத்தக் கட்டத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இன்றி தமிழ் சினிமாவில் பல நடிகர்களை உருவாக்கி வைத்தவர் இயக்குநர் பாரதிராஜா.

மேலும் தற்போது உள்ள பல பிரபல நடிகர்கள் இயக்குநர் பாரதிராஜாவின் படங்கள் மூலம் அறிமுகம் ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இயக்குநராக பலப் படங்களை இயக்கிய இயக்குநர் பாரதி ராஜா பலப் படங்களில் நடிக்கவும் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி சினிமாவில் பல சாதனைகளைப் படைத்த இவர் உயிரிழந்த சம்பவம் தமிழ் சினிமா பிரபலங்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய அளவில் பிரபலங்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படங்களில் அப்டேட்டை ஒத்திவைத்த மகுடம், மண்டாட்டி படக்குழுவினர்:

இந்த நிலையில் இன்று நடிகர்கள் சூரியின் மண்டாட்டி படம் தொடர்பான முக்கிய அப்டேட் மற்றும் விஷாலின் மகுடம் படத்தின் டீசரை மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. இந்த நிலையில் பாரதிராஜா மறைந்த காரணத்தால் இந்தப் படங்கள் தொடர்பான அப்டேட்கள் இன்று வெளியாகவில்லை என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் நாளை 11-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு அந்த அப்டேட்கள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read… கலையரசன் – விதார்த் நடிப்பில் வெளியானது மூன்றாம் கண் பட ட்ரெய்லர்

மகுடம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

மண்டாட்டி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… உங்களுக்கு கசின்ஸ் ரொம்ப பிடிக்குமா? அப்போ இந்த கசின்ஸ் அண்ட் கல்யாணம்ஸ் சீரிஸை மிஸ் செய்யாதீர்கள்

Follow Us