கலையரசன் – விதார்த் நடிப்பில் வெளியானது மூன்றாம் கண் பட ட்ரெய்லர்
Moondram Kan Movie Official Trailer Out Now | தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக வலம் வரும் நடிகர்கள் கலையரசன் மற்றும் விதார்த் இருவரும் இணைந்து நடித்து உள்ள படம் மூன்றாம் கண். இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் சின்ன சின்ன பெயரிடப்படாத வேடங்களில் நடித்து வந்தவர் நடிகர் விதார்த். இவர் கடந்த 2008-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான ராமன் தேரிய சீதை என்ற படத்தின் மூலம் மக்களிடையே கவனத்தை ஈர்க்கத் தொடங்கினார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நடிகர் விதார்த் கடந்த 2010-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான மைனா என்ற படத்தின் மூலமாக படத்தில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் கதையின் நாயகனாக பலப் படங்களில் வரிசையாக நடித்து உள்ளார் நடிகர் விதார்த். அதன்படி இவரது நடிப்பில் வெளியான பலப் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விதார் இரண்டு நாயகனகள் அல்லது மூன்று நாயகன்கள் படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் விதார்த்தின் நடிப்பில் இறுதியான திரையரங்குகளில் வெளியான படம் மருதம். இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக இவரது நடிப்பில் வெளியாக உள்ள படம் மூன்றாம் கண்.




வெளியானது மூன்றாம் கண் பட ட்ரெய்லர்:
இயக்குநர் சகோ கணேஷன் எழுதி இயக்கி உள்ள படம் மூன்றாம் கண். இந்தப் படத்தில் நடிகர்கள் விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப், திரிகன், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஜான் விஜய், ராதா சீனிவாசன், கேபிஒய் சரத், ஸ்வேதா டோரதி, ஐஸ்வர்யா கே.எஸ் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் வருகின்ற 12-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… பெண்ணியம் சார்ந்த படத்தை தயாரிக்கும் லோகேஷ் கனகராஜ்? ஹீரோயின் இவர்தான்!
மூன்றாம் கண் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Catch The Riveting Trailer of #Moondramkan Out Now…!🔥🎬
🎶@ajesh_ashok @vidaarth_actor @kalaiactor @actorsanthosh @Thrigun_Actor @Teju_ashwini_ @athulya_chandra @TrendingEntmt @WhiteHorseOffl @sasikumarwhs @sagoganesan @Rajprathaprs @nsuthay… pic.twitter.com/auow9bzIJx
— Saregama South (@saregamasouth) June 9, 2026
Also Read… ஓடிடியில் வெளியாகி உள்ள இயக்குநர் ரத்ன குமாரின் 29 படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ