நோ ரீ ஷூட்… பேட்ச் ஒர்க் ஒன்லி… வைரலாகும் ஜெயிலர் 2 குறித்த தகவல்
Jailer 2 Movie Shooting Update | தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இந்தப் படம் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் 50 வருடங்களைக் கடந்தும் தற்போது வரை முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவர் பிறகு வில்லன் கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்தார். தற்போது ரஜினிகாந்த் நாயகனாக மட்டுமே நடிக்கும் தலைமுறையினர் அவர் வில்லனாக நடித்தப் படங்களை பார்த்தால் மிரண்டுவிடுவார்கள். அந்த அளவிற்கு கொடூர வில்லனாக எல்லாம் நடிகர் ரஜினிகாந்த் முன்னதாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நாயகனாக நடிக்கத் தொடங்கிய நடிகர் ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 75 வயதைக் கடந்தும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார் ரஜினிகாந்த்.
அதன்படி நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியக உள்ள படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தின் முதல் பாகம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான இந்தப் படம் இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.




ஜெயிலர் 2 படத்திற்கு ரீ ஷூட் இல்லை:
ஜெயிலர் 2 படத்தின் சில பேட்ச் ஒர்க் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது. மறு படப்பிடிப்பு எதுவும் நடைபெறவில்லை. படத்தில் சில சர்ப்ரைஸ் அம்சங்கள் இருக்கும். செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வெளியிட இலக்கு வைக்கப்பட்டுள்ளது. நெல்சன் ஒரு பிரம்மாண்டமான நட்சத்திரப் பட்டாளத்துடன் ஒரு முழுமையான விருந்தைத் தயாரிக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், சந்தானம், எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, சூரஜ் வெஞ்சாரமூடு, மிதுன் சக்ரவர்த்தி, வித்யா பாலன், விநாயகன், முதல் பாகத்தின் கதாபாத்திரங்கள் மற்றும் நெல்சன் ஸ்டைலில் மற்ற சுவாரஸ்யமான புதிய கதாபாத்திரங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… சேயோன் படத்தின் முதல் பாடலின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு – வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Jailer2 – Only Some Patch Work Shoot is Pending..✅ No Reshoot is happening..✌️ Film will have some Surprise Elements..⭐ Aiming for a Sep/Oct Release..🤝#Nelson is cooking a Proper Feast with Massive Cast..🔥Superstar #Rajinikanth, Mohanlal, Shivarajkumar, Santhanam,…
— Laxmi Kanth (@iammoviebuff007) June 8, 2026
Also Read… ஜூன் மாதம் வெளியீட்டில் இருந்து ஒத்திவைக்கப்படும் ஜன நாயன் படம் – தொடரும் சென்சார் சிக்கல்!