விஜய் சொன்ன வார்த்தை… முக்கிய முடிவு எடுத்த ஜன நாயகன் படக்குழு!
KVN Productions planning to refund the films distributors | தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் பிரச்சனை தொடர்ந்து நீண்டு கொண்டே உள்ள நிலையில் படக்குழு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் விஜய் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் ஜன நாயகன். நடிகர் தளபதி விஜய் தீவிர அரசியலில் ஈடுபட்டதால் இனி அவர் படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும் ஜன நாயகன் தான் அவரது நடிப்பில் வெளியாகும் இறுதிப் படம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த செய்தி அவரது ரசிகர்கள் மட்டும் இன்றி திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் உச்சத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருந்து இந்த முடிவை தளபதி விஜய் எடுத்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாவதாக இருந்த ஜன நாயகன் படம் சென்சார் பிரச்சனை காரணமாக தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் படத்தின் சென்சார் பிரச்சனை ஒரு பக்கம் சென்று கொண்டு இருக்க தமிழ் நாட்டின் சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்று முதலமைச்சராக உள்ள தளபதி விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த திரையரங்க உரிமையாளர்கள் ஜன நாயகன் படத்தின் விநியோக உரிமையில் தங்களது பணம் அதிக அளவில் முடங்கி இருப்பதாகவும் படத்தை வெளியிட முயற்சி செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் ஜன நாயகன் தயாரிப்பு நிறுவனத்திடம் விநியோகஸ்தர்களின் பணத்தை திருப்பி அளிக்குமாறு கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியானது.




விஜயின் வார்த்தையை மதித்து ஜன நாயகன் டீம் செய்த செயல்:
தளபதி விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’-இன் தமிழக விநியோக உரிமையை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தனித்தனியாக விற்பனை செய்திருந்தது. சில காரணங்களால், அறிவிக்கப்பட்ட தேதியில் இப்படம் வெளியாகவில்லை. முதலில் ஜனவரி 9-ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அப்போதைய வெளியீடு நடைபெறாததாலும், தற்போது சுமார் ஆறு மாதங்கள் தாமதமாவதாலும், விநியோக உரிமையை வாங்கியவர்களுக்கு அவர்கள் செலுத்திய தொகையை வட்டியுடன் திருப்பித் தர கேவிஎன் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… ராம் சரணின் கெரியர் பெஸ்டாக அமைந்ததா பெத்தி படம்? மக்கள் கொடுத்த விமர்சனம் இதோ
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#ThalapathyVijay‘s final film, #JanaNayagan, was sold individually in Tamil Nadu by KVN Productions. Due to certain reasons, the film was not released on the announced date. It was originally scheduled to release on January 9, but since it did not release then and has now been… pic.twitter.com/yury3rTwOG
— Movie Tamil (@_MovieTamil) June 5, 2026
Also Read… சிலம்பரசன் – அஸ்வத் மாரிமுத்துவின் படம் ஒத்திவைக்கப்பட்டதா? தயாரிப்பாளர் விளக்கம்