சிலம்பரசன் – அஸ்வத் மாரிமுத்துவின் படம் ஒத்திவைக்கப்பட்டதா? தயாரிப்பாளர் விளக்கம்
Producer Archana Kalpathi | தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக வலம் வருகிறது ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட். இந்த நிறுவனத்தை அண்ணன் தம்பிகள் இணைந்து நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தில் தயாரிப்பாளராக உள்ள அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் அளித்த பேட்டி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிலம்பரசன் நடிப்பில் தற்போது அரசன் படம் விறுவிறுப்பாக உருவாகி வருகின்றது. இயக்குநர் வெற்றி மாறன் இந்தப் படத்தை எழுதி இயக்கி வருகிறார். வட சென்னை பகுதியை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தின் அறிமுக வீடியோ முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் அந்த வீடியோவைப் பார்த்த பிறகு மக்களுக்கு அரசன் படத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த அரசன் படம் இந்த 2026-ம் ஆண்டின் இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக அந்தப் படம் ஒத்திவைக்கபப்ட்டதாக சினிமா வட்டாரங்களில் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அது குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




சிலம்பரசன் – அஸ்வத் மாரிமுத்துவின் படம் ஒத்திவைக்கப்பட்டதா?
படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதா என்று தயாரிப்பாளரிடம் கேட்ட கேள்விக்கு அவர், இல்லை, அது துளியும் உண்மையல்ல. சிம்பு தற்போது அரசன் படத்தின் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். அஸ்வத் இன்னும் திரைக்கதையை இறுதி செய்யும் பணியில் இருக்கிறார். இந்த இயக்குநர்கள் தாங்கள் எழுதுவதில் மிகுந்த துல்லியத்துடனும் கவனத்துடனும் இருப்பார்கள்.
மேலும், தங்கள் மனதில் உள்ள அந்தக் காட்சியமைப்பை அப்படியே திரையில் கொண்டு வருவார்கள். பிரதீப் விஷயத்திலும் இதுவேதான் நடந்தது. அவர் எழுதியதை அப்படியே, மிகச் சரியாகப் படமாக்கினார். மேலும், நாங்கள் நிறைய புத்தகங்களைப் படிப்பதையும் அவர்கள் ஊக்குவிக்கிறார்கள். அட்லியிடமிருந்து நான் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்; அதேபோலவே, இவர்களிடமிருந்தும் நான் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன் என்று அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… எல்கேஜி படத்தில் அந்த காட்சி உண்மையாக நடந்த சம்பவம் – ஆர்.ஜே.பாலாஜி ஓபன் டாக்
இணையத்தில் வைரலாகும் அர்ச்சனா கல்பாத்தி பேச்சு:
#ArchanaKalpathi – Recent Interview
Question: There have been many news reports claiming that a conflict arose between #Simbu and #AshwathMarimuthu, and that the film was shelved because of it. Is that true?
Archana Kalpathi:
No, that’s not true at all. Simbu is currently busy… pic.twitter.com/uSQUPdhOjT— Movie Tamil (@_MovieTamil) June 4, 2026
Also Read… சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் ராகவா லாரன்ஸ் மகள் – வைரலாகும் தகவல்