மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடரும் மழை.. எத்தனை நாட்களுக்கு? வெப்பநிலை எப்படி இருக்கும்?
அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், இயல்பை ஒட்டியே காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகப் பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 23, 2026: தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் வெப்பநிலையின் தாக்கம் குறைந்திருந்தாலும், சில மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பநிலை தொடர்ந்து பதிவாகி வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 41.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, திருத்தணியில் 38.1 டிகிரி, திருச்சியில் 38.9 டிகிரி, பாளையங்கோட்டையில் 39.5 டிகிரி, நாகையில் 38 டிகிரி, ஈரோட்டில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
100 டிகிரி கடந்து பதிவாகும் வெப்பநிலை:
சென்னையைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 38.4 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 38.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக மதுரையில் இயல்பை விட 4.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாகப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில், வரக்கூடிய நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: டெல்லி போராட்டத்தை திசைதிருப்ப முயற்சி.. மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – அண்ணாமலை
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடரும் மழை:
ஜூலை 25ஆம் தேதியைப் பொறுத்தவரையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடதமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகப் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஜூலை 27 மற்றும் 28ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மட்டும் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை:
அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், இயல்பை ஒட்டியே காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகப் பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ராகுல் காந்தி கைது – ஜனநாயகத்திற்கு எதிரானது.. முதல்வர் விஜய் கண்டனம்..
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.