AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ராகுல் காந்தி கைது – ஜனநாயகத்திற்கு எதிரானது.. முதல்வர் விஜய் கண்டனம்..

நீட் தேர்வைப் பொறுத்தவரை, நீட் தேர்வு முறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது, அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காகப் பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம் என முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி கைது – ஜனநாயகத்திற்கு எதிரானது.. முதல்வர் விஜய் கண்டனம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 22 Jul 2026 14:49 PM IST

ஜூலை 22, 2026: நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்றைய தினம் குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்டதற்கு, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, கரப்பான் ஜனதா கட்சியினர் மற்றும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஜந்தர் மந்தரில் திரண்டு, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி:

இந்தச் சூழலில், நேற்றைய தினம் டெல்லியில் பிரதமர் இல்லத்தை நோக்கி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த நிலையில், ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

ராகுல் காந்தி கைது – முதல்வர் விஜய் கண்டனம்:


“நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.

நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து, எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.

மேலும் படிக்க: “நீட் தேர்வு ரத்தே நிரந்தர தீர்வு!”.. டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

நீட் தேர்வைப் பொறுத்தவரை, நீட் தேர்வு முறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது, அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காகப் பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.

நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும்:

நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை இடைக்காலத் தீர்வாக ‘Special Concurrent List’ உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.

இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தியிருக்கிறோம்.

மேலும் படிக்க: டெல்லியில் CJPக்கு ஆதரவாக போராட்ட களத்தில் திருமாவளவன்.. காயமடைந்த மாணவர்களுக்கு ஆறுதல்!!

நம் மக்களின் உணர்வுகளையும், மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.”

Follow Us