மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர், மாசடைந்த ஆற்றை தனி ஒருவராக களத்தில் இறங்கி சுத்தம் செய்து, தற்போது உலக அளவில் கவனம் பெற்றுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பியோரா பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திர சிங் சௌத்ரி. சமூக வலைதளங்களில் இவர் ‘பிட்டூ தபாஹி’ என்ற பெயரில் பிரபலமாக உள்ளார். பியோரா பகுதியில் உள்ள அஜ்னார் ஆற்றில் பிளாஸ்டிக், பாசி மற்றும் குப்பைகள் அதிக அளவில் தேங்கியிருந்த நிலையில், இதை பார்த்த சுரேந்திர சிங், யாருடைய உதவியும் இல்லாமல் ஆற்றை சுத்தம் செய்யும் பணியை தொடங்கினார்.