AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டெல்லியில் CJPக்கு ஆதரவாக போராட்ட களத்தில் திருமாவளவன்.. காயமடைந்த மாணவர்களுக்கு ஆறுதல்!!

Thirumavalavan Delhi CJP protest: டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி காயமடைந்த மாணவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விசிக தலைவர் தொல். திருமாவளவன், வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

டெல்லியில் CJPக்கு ஆதரவாக போராட்ட களத்தில் திருமாவளவன்.. காயமடைந்த மாணவர்களுக்கு ஆறுதல்!!
திருமாவளவன் எம்.பி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 22 Jul 2026 08:38 AM IST

டெல்லி, ஜூலை 22: நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தைக் கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்திய ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ மாணவர் அமைப்பினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த மாணவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் விசிக பொதுச்செயலாளரும் எம்.பி-யுமான முனைவர் ரவிகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகளும் உடன் சென்றிருந்தனர். காயமடைந்த மாணவர்களைச் சந்தித்த பின், செய்தியாளர்களிடம் பேசிய தொல். திருமாவளவன் டெல்லி காவல்துறை மற்றும் ஒன்றிய பாஜக அரசைக் கடுமையாகக் விமர்சித்துப் பேசினார்.

மேலும் படிக்க: ரூ.2 ஆயிரத்துக்கு ஆசைப்பட்டு கை நீட்டிய வயர்மேன்.. கம்பி எண்ண வைத்த லஞ்ச ஒழிப்புத்துறை.. தென்காசியில் அதிரடி நடவடிக்கை!

மத்திய அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்:

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய திருமாவளவன், நீட் தேர்வு முறை இந்திய நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நாளிலிருந்தே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதனைத் தீவிரமாக எதிர்த்து வருகிறது. நாடு முழுவதும் நீட் தேர்வை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்பதே எங்களது பிரதான கோரிக்கை. நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இந்த நியாயமான கோரிக்கையை வலியுறுத்திப் போராடும் மாணவர்களின் கோரிக்கையை நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூலிப்படையினர் நடத்திய வன்முறை:

மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த திருமாவளவன், “நேற்று அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூரமான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறையினருடன் சேர்ந்து, சீருடை அணியாத பல பாஜக கூலிப்படையினரும், ரவுடிகளும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டு மாணவர்களைக் காயப்படுத்தியுள்ளனர்.

தங்களது அடையாளங்களை மறைப்பதற்காகவே பெயர்ப் பலகை மற்றும் சீருடை இல்லாமல் வந்து இத்தகைய வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையும் கூலிப்படையினரும் இணைந்து நடத்திய இந்த அக்கிரமத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கடுமையாகக் கண்டிக்கிறோம்.

மேலும் படிக்க: அம்மனாக திரிஷா – கோவில் திருவிழா பேனரால் சர்ச்சை – 2 பேர் மீது வழக்குப்பதிவு

ராகுல் காந்திக்கு ஆதரவு:

பிரதமர் இல்லத்தின் முன் ராகுல் காந்தி நடத்தி வரும் போராட்டம், மாணவர் போராட்டத்தின் கவனத்தைத் திசைதிருப்பும் செயல் என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியது குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த திருமாவளவன், “அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்தச் சுட்டிக்காட்டலை நான் முற்றிலும் மறுக்கிறேன். மாணவர்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு நாட்டின் அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். அந்த வகையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் ஆதரவு அளிப்பது போராட்டத்தை பலப்படுத்துமே தவிர, அதைக் கொச்சைப்படுத்தாது. எனவே கேஜரிவாலின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை” என்று தெளிவுபடுத்தினார்.

Follow Us