அம்மனாக திரிஷா – கோவில் திருவிழா பேனரால் சர்ச்சை – 2 பேர் மீது வழக்குப்பதிவு
சேலம் அருகே கோவில் திருவிழா பேனரால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக கூறி அம்மன் வேடத்தில் இருந்த திரிஷாவின் பேனரை காவல்துறையினர் அகற்றியுள்ளனர். அந்த பேனரில் தமிழக முதல்வர் விஜய்யின் படமும் கீழே அம்மன் வேடத்தில் திரிஷா இருக்கும் படமும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
சேலம், ஜூலை 21 : கோவில் திருவிழா பேனரால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக கூறி அம்மன் வேடத்தில் இருந்த திரிஷாவின் பேனரை காவல்துறையினர் அகற்றியுள்ளனர். இது தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பெரிய மாரியம்மன் ஆடி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருவிழாவுக்காக வைக்கப்பட்ட ஒரு பேனரில் தமிழக முதல்வர் விஜய்யின் படமும் கீழே அம்மன் வேடத்தில் திரிஷா இருக்கும் படமும் இடம் பெற்றிருந்தது.
கோவில் திருவிழா பேனரால் சர்ச்சை
இந்த பேனர் சமூக வலைதளங்களில் சர்ச்சையான நிலையில். ஆத்தூர் பயணியர் மாளிகை முன்பு அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்கப்பட்டுள்ளதாக கூறி காவல்துறையினர் அகற்றினர். மேலும் இது தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க : தவெக கொடி நிறத்தில் அரசு பேருந்து? வைரலாகும் போட்டோவால் வலுக்கும் சர்ச்சை




சேலம் மாவட்டம் ஆத்தூரில் புகழ்பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதம் கொண்டாடப்படும் ஆடித் திருவிழா வெகு விமர்சையாக கொண்டடாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவிழாவை முன்னிட்டு அப்பகுதி இளைஞர்கள் சிலர் பேனர் வைத்திருக்கின்றனர். அதன் ஒரு பகுகியாக ஆத்தூர் பயணியர் மாளிகை அருகேயும் பேனர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில் அதில் ஒரு பேனரில் முதல்வர் விஜய்யின் படமும், கீழே அம்மன் வேடத்தில் இருக்கும் திரிஷாவின் படமும் இடம் பெற்றிருந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அந்த பகுதி இளைஞர்களிடையே இந்த பேனருக்கு வரவேற்பு இருந்தாலும், பலரும் அம்மன் வேடத்தில் திரிஷாவின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது விமர்சித்தனர்.
இந்த நிலையில் சர்ச்சை எழுந்த நிலையில் இரவோடு இரவாக அம்மன் வேடத்தில் திரிஷாவின் புகைப்படம் மாற்றப்பட்டு, அம்மன் புகைப்படத்தை மாற்றினர். இந்த நிலையில் ஆத்தூர் பயணியர் மாளிகை முன்பு அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பேனர் வைத்ததாக போலீசார் அந்த பேனரை அகற்றினர். மேலும், இதுகுறித்து புகாரின் அடிப்படையில் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
92323
இந்த நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது பேனரில் மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும் இது பக்தர்களின் மனதை புன்படுத்துவதாக உள்ளதாகவும், எதிர்காலத்தில் இது போன்ற செயல்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.