அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்த முதல்வர்.. இயற்கை எரிவாயு நிறுவனத்தில் விஜய் திடீர் விசிட்!
CM Vijay Inspects Natural Gas Company : சென்னை சேத்துப்பட்டு ஸ்ரீனிவாசா மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மக்கும் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் முறையை முதல்வர் விஜய் பார்வையிட்டார்.
சென்னை மாவட்டத்தில், சேத்துப்பட்டில் மாநகராட்சியுடன் இணைந்து ஸ்ரீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் இயற்கை எரிவாயு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு, கோயம்பேடு சந்தை மற்றும் ஹோட்டலில் மீதமாகும் கழிவுகள் மூலம் இயற்கை எரிவாயு தயார் செய்யப்பட்டு வருகிறது. பொது மற்றும் தனியார் கூட்டு நிறுவனங்கள் பங்களிப்பு முறையில் ஸ்ரீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கை எரிவாயு ஆகியவை தயார் செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 100 டன் அளவு உணவு, காய்கறி கழிவுகளை மறுசுழற்ச்சி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் திடீரென ஆய்வு மேற்கொண்டார். இதில், மக்கும் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் முறையை முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு பார்வையிட்டார். அப்போது, நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் இயற்கை எரிவாயு தயாரிப்பு குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.
தென்னிந்தியாவின் முதல் சிஎன்ஜி பயோ மையம்
இந்த நிறுவனமானது தென்னிந்தியாவின் முதல் சிஎன்ஜி, பயோ மையத்தை அமைத்து இயக்கி வருகிறது. கடந்த 2003- ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மையமானது சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஒரு சுற்றுச்சூழல் தீர்வுகளில் காணப்படும் நிறுவனமாக இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் முக்கியமாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனமானது நகராட்சி திடக்கழிவு சேகரிப்பு, நுண் உரம் தயாரித்தல், மைக்ரோ கம்போசிங், பயோ மைனிங் மற்றும் பரிம கழிவுகளை அகற்ற பயன்படுத்தப்படும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: அதிமுகவில் வெடித்தது பூகம்பம்: சி.வி. சண்முகம் தலைமையில் 1,300 பேர் கூண்டோடு ராஜினாமா!




3 மாவட்டங்களில் முக்கிய ஒப்பந்தங்கள்
மேலும், இந்த நிறுவனத்தில் நகராட்சி மற்றும் வணிகரீதியான செயல்பாடு தமிழகத்தில் பெரும்பளவில் குவிந்து இருக்கின்றன. சென்னை மாநகராட்சி மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இந்த முக்கிய ஒப்பந்தங்களை இந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த ஆலையில் நாள் ஒன்றுக்கு சுமார் 100 டன் உணவு கழிவுகள், காய்கறி கழிவுகள் ஆகியவற்றை மறுசுழற்சி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
உணவு கழிவுகள் மூலம் இயற்கை எரிவாயு
சென்னை கோயம்பேடு சந்தை, மாநகரத்தின் முக்கிய உணவகங்களில் இருந்து சேகரிக்கப்படும் உணவு கழிவுகள் உள்ளிட்ட ஈரமான கழிவுகள் இங்கு பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் சுத்திகரிக்கப்பட்ட இயற்கை எரிவாயு, மீத்தேன் சிலிண்டர் வணிக ஓட்டல்கள், வாகன எரிவாயு, எல். பி. ஜி. ஆகியவற்றுக்கு மாற்றாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் நகரத்தில் கார்பன் குறைக்கவும், பசுமை ஆற்றலை ஊக்குவிக்கவும் பெருமளவில் உதவும் என்று சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க: பழனி தண்டாயுதபாணி முருகன் கோயில் நில முறைகேடு பத்திரம் வெளியீடு.. பெரும் அதிர்ச்சி.. நடந்தது என்ன?