பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் சர்வசாதாரணமாக உலா வரும் காட்டுப்பன்றிகள்
கோவை மருதமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது நுழைந்து வருகின்றன. கோடை மழை பொய்த்ததால் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி இரவு நேரங்களில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் உலா வருகின்றன.

காட்டுப்பன்றிகள், முயல்கள், சாம்பார் மான்கள் மட்டுமின்றி யானைகள், சிறுத்தைகளும் இப்பகுதிக்கு வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இரவு நேரங்களில் மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் காவலாளிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், இன்று மாலை சுமார் 7 மணியளவில் காட்டுப்பன்றி ஒன்று பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து பிளாஸ்டிக் கழிவுகளைத் தேடி உண்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் சர்வசாதாரணமாக உலா வரும் பன்றி
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஏற்பாடுகள் தீவிரம்..
முதல்வர் விஜய்யின் பேச்சு மிகவும் கீழ்த்தரமானது - எம்.பி கனிமொழி
மாமதுரை திருவிழா 2.0 - பட்டாசு வெடிப்பதை காண கூடிய பொதுமக்கள்!