AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெக கொடி நிறத்தில் அரசு பேருந்து? வைரலாகும் போட்டோவால் வலுக்கும் சர்ச்சை

சென்னை மாநகராட்சியில் போதிய பேருந்துகள் இல்லாத சூழல் இருக்கிறது. இந்த நிலையில் இதனை முன்னிட்டு மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் புதிதாக 300 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தயாராகும் பேருந்துகள் தவெக கொடி நிறத்தில் வண்ணம் பூசப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது

தவெக கொடி நிறத்தில் அரசு பேருந்து? வைரலாகும் போட்டோவால் வலுக்கும் சர்ச்சை
அரசு பேருந்தில் தவெக நிறம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 21 Jul 2026 08:38 AM IST

சென்னை, ஜூலை 21 : சென்னை மாநகர பேருந்துகளில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். இருப்பினும் இன்னும் போதிய பேருந்துகள் இல்லாத சூழல் இருக்கிறது. இந்த நிலையில் இதனை அதிகரிக்க மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது சென்னை மாநகர போக்குவரத்து சார்பில் மேலும் 300 பேருந்துகள் ஆகஸ்ட் 2026 இறுதிக்குள் கொண்டுவரப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவெக கொடி நிறத்தில் அரசு பேருந்து?

இந்த நிலையில் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள பேருந்துகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் தவெகவின் கொடியின் நிறமான மஞ்சள் மற்றும் சிகப்பு நிறத்தில் வண்ணம் பூசப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கேற்ப மஞ்சள் மற்றும் சிகப்பு நிறத்திலான பேருந்து ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்த முதல்வர்.. இயற்கை எரிவாயு நிறுவனத்தில் விஜய் திடீர் விசிட்!

தமிழக அரசு சார்பில் காலை, மாலை இரு வேளைகளிலும் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை மாநகராட்சிக்கு புதிதாக 300 பேருந்துகளை அறிமுகப்படுத்தவுள்ளது. இதில் டீசல் மற்றும் சி.என்.ஜி. மாடல்கள் அடங்கியுள்ளன. அனைத்து பகுதிகளுக்கும் போக்குவரத்து வசதிகள் சென்று சேரவும், பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தவும் இந்த மினி பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ரூ. 127 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த வாகனங்கள், நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பயணிகளுக்கு வசதியான பயணத்தை வழங்குவதற்காகவும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஒரு பக்கம் மக்கள் வரிப்பணத்தில் கட்சி விளம்பரம் செய்வதா? எதிர்கட்சியினர் பலரும் விமர்சித்து வருகின்றனர். அதே நேரம், இது தவெக கொடி நிறம் இல்லை எனவும் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த பேருந்துகளுக்கு இதே போன்ற நிறம் இடம் பெற்றிருப்பதாகவும் தவெகவினர் விளக்கம் அளிப்பதையும் பார்க்க முடிகிறது. இணையத்தில் வைரலாகும் அந்த படத்தில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் என்ற ஸ்டிக்கரும் இடம் பெற்றுள்ளது. இதனால், சென்னை எம்.டி.சிக்காக இந்த பேருந்துகள் தயாராகி வருவதாக பலரும் கூறி வருகிறார்கள். எனினும், இந்த புகைப்படங்களின் உண்மைத்தன்மை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இதையும் படிக்க : கைது நடவடிக்கைக்கு அஞ்சமாட்டோம்.. சட்ட ரீதியாக சந்திப்போம்.. பொங்கிய ஆர்.எஸ்.பாரதி!

இதற்கிடையில் சமீபத்தில் நடைபெற்ற போக்குவரத்துத் துறை ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் 2,000 புதிய குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளை உடனடியாக கொள்முதல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow Us