எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை தான் நினைவுபடுத்த விரும்புகிறோம் – அமைச்சர் வன்னி அரசு
மக்களுக்காக சேவையாற்றும் தளமாக அரசியல் களத்தைப் பார்க்காமல், ஆட்சி அதிகாரத்தைத் தனிநபர் வளர்ச்சிக்கான வாய்ப்பாகக் கருதி வந்ததால், தோல்வியின் விரக்தியில் இவ்வாறு அநாகரிகமாகச் செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது என தமிழ்நாடு அமைச்சர் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாருமான வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
ஜூலை 20, 2026: தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை விமர்சிக்கும் வகையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசியிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் வன்னியரசு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன் என மார்க்கண்டேயன் பேசியதாகக் கூறப்படும் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திமுக எம்.எல்.ஏ மார்கண்டேயனின் வன்முறை தூண்டும் பேச்சு:
“சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன்” என்று வன்முறையை தூண்டும் வகையில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர்
திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ளார்.ஏற்கனவே மேனாள் அமைச்சரும்
திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினருமான திரு.… https://t.co/TCqAELiUaM— வன்னி அரசு (@VanniTamizhVCK) July 20, 2026
இந்த நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் வன்னியரசு வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன் என்று வன்முறையைத் தூண்டும் வகையில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசியுள்ளார்.
மேலும் படிக்க: “நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா?”.. திமுக எம்.எல்.ஏ கைதுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி கடும் கண்டனம்!!
ஏற்கனவே முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன், தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இவர்களைப் போல பலரும் மிக மோசமான தாக்குதலைத் தொடுத்து வருகின்றனர்.
எலும்புகள் எல்லோருக்கும் உண்டு:
மக்களுக்காக சேவையாற்றும் தளமாக அரசியல் களத்தைப் பார்க்காமல், ஆட்சி அதிகாரத்தைத் தனிநபர் வளர்ச்சிக்கான வாய்ப்பாகக் கருதி வந்ததால், தோல்வியின் விரக்தியில் இவ்வாறு அநாகரிகமாகச் செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
மேலும் படிக்க: அதிமுகவில் வெடித்தது பூகம்பம்: சி.வி. சண்முகம் தலைமையில் 1,300 பேர் கூண்டோடு ராஜினாமா!
சட்டமன்றத்துக்குள் முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ள நிலையில், அவர் மீது சட்டப்பேரவைத் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதைத் தான் நினைவுபடுத்த விரும்புகிறோம்” என அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.