இரண்டாவதும் பெண்.. பச்சிளம் குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்த பாட்டி!
Woman Killed New Born Baby Girl | சேலம் மாவட்டம், பவானி பகுதியில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தையை அவரது பாட்டி கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். அந்த குழந்தை, பெண்ணாக பிறந்ததன் காரணமாக அவர் இந்த கொடூரத்தை செய்துள்ளார்.
பவானி, ஜூலை 21 : பவானி பகுதியில் பச்சிளம் குழந்தையை அவரது பாட்டியே கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக பிறந்த நிலையில், அந்த பெண் இந்த கொடூர செயலை செய்துள்ளார். இது குறித்து தகவலறிந்த போலோசார், அந்த பெண்ணின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். பாட்டியே தனது பேரப்பிள்ளையை கொடூரமாக கொலை செய்த இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பச்சிளம் குழந்தையை கொலை செய்த மூதாட்டி
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள கொத்தபாளையம் செட்டிமாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவருக்கு திருமணமாகி பிரியதர்ஷினி என்ற 25 வயது மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு நான்கு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் தான், அவர்களுக்கு மீண்டும் ஜூலை 18, 2026 அன்று இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதையும் படிங்க : இந்த அரசின் அராஜகத்தை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் – உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
பச்சிளம் குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்த பாட்டி
பிரியதர்ஷினிக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் அவரது தாய் தங்கமணி அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பிரியதர்ஷினிக்கு குழந்தை பிறந்த நிலையில், சில நிமிடங்களிலேயே குழந்தை அசைவின்றி கிடப்பதாக அவர் மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : திமுகவில் பெரும் அதிர்ச்சி.. எம்எல்ஏ மார்க்கண்டேயன் சிறையில் அடைப்பு? ஆகஸ்ட் 3 வரை நீதிமன்ற காவல்!
இந்த நிலையில், அந்த இடத்திற்கு சென்ற மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்துள்ளனர். அப்போது குழந்தை உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த நிலையில் மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில் தெரிய வந்த பின்னணி
அப்போது தங்கமணி குழந்தை மூச்சு திணறி உயிரிழந்ததாக கூறியுள்ளார். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் குழந்தையை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அப்போதுதான் குழந்தை மூச்சுத்திணறி பலியானது தெரிய வந்துள்ளது.