AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்த அரசின் அராஜகத்தை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் – உதயநிதி ஸ்டாலின் கண்டனம்..

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் தனது கண்டனத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், “விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் மார்க்கண்டேயன் அவர்களை, பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரை விமர்சித்துப் பேசினார் என்று கைது செய்துள்ள Sofa Model அரசை வன்மையாக கண்டிக்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த அரசின் அராஜகத்தை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் – உதயநிதி ஸ்டாலின் கண்டனம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 20 Jul 2026 21:34 PM IST

ஜூலை 20, 2026: திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை அச்சுறுத்தும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. அதாவது, சட்டமன்றத்திற்குள் வைத்து முதலமைச்சர் விஜயின் எலும்பை உடைப்பேன் என அவர் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மார்க்கண்டேயன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தவெக அரசை கண்டிக்கிறேன் – உதயநிதி ஸ்டாலின்:


இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் தனது கண்டனத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், “விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் மார்க்கண்டேயன் அவர்களை, பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரை விமர்சித்துப் பேசினார் என்று கைது செய்துள்ள Sofa Model அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு, ஒரே நாளில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை கைது செய்து இருக்கிறார்கள்.

பொதுக்கூட்டத்தில் பேசினார் என்பதற்காக, மக்கள் பிரதிநிதி என்றும் பார்க்காமல், காலை 6 மணிக்கே காவல்துறையை வீட்டுக்கு அனுப்பி கைது செய்து, விசாரணை என்ற பெயரில் SP அலுவலத்தில் அடைத்து வைப்பது உட்சபட்ச அடக்குமுறை.

Also Read: போலீசார் துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனர்.. கைதான திமுக எம்எல்ஏ பகீர் குற்றச்சாட்டு!

இதே தூத்துக்குடி மாவட்டத்தில், கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணாலேயே குற்றஞ்சாட்டப்பட்ட த.வெ.க MLA, கைது ஏதும் செய்யப்படாமல் லாரி டயர்களை ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். இந்த சூழலில் கழக சட்டமன்ற உறுப்பினரை மட்டும் குறி வைத்து காவல்துறை கைது செய்கிறது.

எத்தனை கைதுகளை செய்தாலும் உடன்பிறப்புகள் ஒருபோதும் அஞ்சமாட்டோம்:

எதிர்க்கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்தினால் அங்கே அரசிற்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் எதிர்பார்ப்பது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது. ஆளும் அரசின் சரி, தவறுகளை சுட்டிக்காட்டுகின்ற – விமர்சிக்கின்ற மாபெரும் ஜனநாயகக் கடமை எதிர்க்கட்சிக்கு இருக்கிறது.

இது புரியாமல், பேசினாலே கைது என்று தொடரும் இந்த அரசின் அராஜகத்தை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆணவத்தில் இதுபோல் எத்தனை கைதுகளை செய்தாலும் கழக உடன்பிறப்புகள் ஒருபோதும் அஞ்சமாட்டோம். மக்கள் மன்றத்திலும் – நீதிமன்றத்திலும் இந்த ஆட்சியாளர்கள் பின்னடைவை சந்திக்கப்போவது உறுதி.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us