AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இளம் இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைக்க என்ன காரணம்? இளையராஜா ஓபன் டாக்

Music Director Ilaiyaraaja | பான் இந்திய மொழிகளில் பிரபல இசையமைப்பாளராக ஆயிரக்கணக்கான பாடல்களை இசையமைத்தவர் இசையமைப்பாளர் இளையராஜா. இவர் சமீபத்தில் விழா ஒன்றில் இளம் இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைப்பது ஏன் என்பது குறித்து பேசியது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இளம் இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைக்க என்ன காரணம்? இளையராஜா ஓபன் டாக்
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் உடன் இளையராஜாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Sep 2026 12:41 PM IST

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி பான் இந்திய மொழிகளில் பல நூறு படங்களுக்கு ஆயிரக்கனாக பாடல்களை இசையமைத்தவர் இசையமைப்பாளர் இளையராஜா. இவரது இசையில் வெளியான பெரும்பான்மையான பாடல்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. இசை ஞானி என்று ரசிகர்கள் அன்புடன் அழைத்து வரும் இளையராஜா இசையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பாடல்களையும் தற்போது உள்ள இளம் தலைமுறையினர் ரசித்து கொண்டாடி வருகின்றனர். மேலும் சினிமாவில் இளம் தலைமுறை இயக்குநர்கள் பலர் தங்களது படங்களுக்கு இசைஞானி இளையராஜா பாடல்களை இசையமைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து இளம் இயக்குநர்களின் படங்களில் இசையமைக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார் இசையமைப்பாளர் இளையராஜா.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது இசையமைப்பாளர் இளையராஜா டோரோத்தி, லெனின் பாண்டியன், பாக்கெட் நாவெல், மஞ்சனத்தி என பலப் படங்களுக்காக இளம் இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இளையராஜாவிடம் இளம் இயக்குநர்களுடன் பணியாற்ற என்ன காரணம் என்று கேள்வி எழுப்பினார்.

இளம் இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைக்க என்ன காரணம்?

அதற்கு பதிலளித்து பேசிய இளையராஜா, புதிய இயக்குநர்களுக்காக இசையமைப்பதே எனது நோக்கம். ஏனெனில், அவர்கள் ஒரு காலிப் பாத்திரத்தைப் போன்றவர்கள். மற்ற இயக்குநர்களின் பாத்திரங்கள் ஏற்கனவே ஏதோ ஒரு திரவத்தால் நிரம்பியிருக்கும். அதில் நான் புதிதாக எதை ஊற்ற முடியும்? பாத்திரம் காலியாக இருக்க வேண்டும் அல்லவா? புதிய இயக்குநர்கள் ஒரு கதையுடன் மட்டுமே வந்து, இன்னின்ன பாணியில் இசை வேண்டும் என்று கேட்பார்கள். ஆனால் நான் அவர்கள் சொல்வதைக் கேட்பதில்லை. ஏனென்றால், இசையை மதிப்பிடுவதற்கான திறனையே அவர்களுக்கு வழங்குவது எனது இசைதான். நல்ல இசை மற்றும் மோசமான இசை குறித்த உங்கள் புரிதலே எனது இசையின் மூலமாகத்தான் உருவாகிறது. கடவுள் எனக்கு அந்த இசையை வழங்கியிருப்பதால்தான், நீங்கள் எனது இசையை ஒரு அளவுகோலாகக் கொள்கிறீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

Also Read… ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது விஸ்வநாத் & சன்ஸ் படக்குழு… எப்போது தெரியுமா?

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கிறோம் – மமிதா பைஜூ குறித்து மகிழ்ச்சியடைந்த அனஸ்வரா ராஜன்

Follow Us