Dorothy: கல்யாண விருந்து.. இளையராஜா இசையில் வெளியானது டோரதி பட ஃபர்ஸ்ட் சிங்கிள்!
Kalyana Virundhu Song: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் 10வது திரைப்படமாக உருவாகியிருப்பதுதான் டோரதி. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் போன்ற நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இதற்கு இளையராஜா இசையமைத்துள்ள நிலையில், கல்யாண் விருந்து என்ற முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் இயக்குநராக இருந்துவருபவர் கார்த்திக் சுப்புராஜ் (Karthik Subburaj). கோலிவுட் சினிமாவில் சூர்யா முதல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் ரெட்ரோ (Retro). சூர்யா (Suriya) நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் கார்த்திக் சுப்புராஜ் இயங்கிவந்த படம்தான் டோரதி (Dorothy). இதை தனது சொந்த தயாரிப்பின் கீழ் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துவர்கிறார். இப்படத்தில் சனந்த் (Sanath), கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) மற்றும் ரிஷிகாந்த் (Rishikanth) போன்ற நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
வித்தியாசமான பாணியில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா (Ilaiyaraaja) இசையமைத்துவரும் நிலையில், இதன் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. கல்யாண் விருந்து (Kalyana Virundhu) என்ற இந்த லிரிக்கல் பாடல் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: டிசி படத்தில் பார்வதியின் கேரக்டரை அப்படி காட்ட விரும்பினேன் – இயக்குநர் அருண் மாதேஸ்வரன்!
கார்த்திக் சுப்புராஜின் டோரதி திரைப்படத்தின் கல்யாண் விருந்து குறித்து வெளியான எக்ஸ் பதிவு:
Raaja Sir music is always my Soul Therapy and working with him was a lifetime dream… And so this moment is feeling very very special to me …. @ilaiyaraaja Sir 🙏🏻❤️🔥
Here’s #KalyanaVirundhu from #Dorothy… 💥💥💥https://t.co/61D54LW5PL#KalyanaVirundhu#ExWeddingPaattu…
— karthik subbaraj (@karthiksubbaraj) August 22, 2026
இந்த டோரதி படமானது ஒரு வித்தியாசமான கதைக்களத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இதில் ரிஷிகாந்த் மற்றும் சனந்த் இருவரின் கதாபாத்திரமே மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இதில் அவரின் கதாபாத்திரத்தின் பெயர்தான் டோரதி. இந்த படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது.
இதையும் படிங்க: விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் க்ளைமேக்ஸ் அப்படி இருக்க இதுதான் காரணம் – இயக்குநர் வெங்கி அட்லூரி
கார்த்திக் சுப்புராஜின் டோரதி படத்தின் சென்சார் அப்டேட்:
இந்த டோரதி படமானது நண்பர்கள், காமெடி மற்றும் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளதாம். இந்த படமானது சிறப்பாக இயக்கப்பட்டுள்ள நிலையில், 2026ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. அதை முன்னிட்டு சென்சார் பணிகளும் நடைபெற்றுவருகிறதாம். இப்படத்திற்கு யு/ ஏ தரச் சென்சார் சான்றிதழை சென்ஸடார் குழு பரிந்துரைத்துள்ளதாம். விரைவில் இப்படத்தின் சென்சார் தொடர்பான அப்டேட்டுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.