AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Dorothy: இளையராஜாவின் இசையில்.. கார்த்திக் சுப்புராஜின் டோரதி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் புரோமோ வெளியீடு!

Kalyana Virundhu song Promo: கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் 10வது படமாக உருவாகியுள்ளதுதான் டோரதி. இந்த படமானது வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள நிலையில், இதற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். இவரின் இசையில் இப்படத்தின் முதல் பாடலான கல்யாண விருந்து பாடலின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Dorothy: இளையராஜாவின் இசையில்.. கார்த்திக் சுப்புராஜின் டோரதி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் புரோமோ வெளியீடு!
டோரதி திரைப்படத்தின் முதல் பாடல் புரோமோ Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 21 Aug 2026 16:45 PM IST

தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குநர்தான் கார்த்திக் சுப்புராஜ் (Karthik Subburaj). இவரின் இயக்கத்தில் தமிழில் இதுவரை பல்வேறு திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வரிசையில் இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் ரெட்ரோ (Retro). நடிகர் சூர்யா (Suriya) மற்றும் பூஜா ஹெக்டேவின் (Pooja hegde) நடிப்பில், இந்த படமானது 2025ம் ஆண்டில் வெளியானது. சந்தோஷ் நாராயணனின் இசையில் வெளியான இந்த படமானது சிறப்பாக வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. இந்த படத்திற்கு பின், கார்த்திக் சுப்புராஜின் 10வது திரைப்படமாக உருவாகியிருப்பதுதான் டோரதி (Dorothy). இதை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி தயாரித்துள்ளார். இதில் சனந்த் (Sananth), ரிஷிகாந்த் (Rishikanth) மற்றும் கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா (Ilaiyaraaja) இசையமைத்துவரும் நிலையில், முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், இன்று (21/08/2026) “கல்யாண் விருந்து” (Kalyana Virundhu) என்ற இப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ரோம்-காம் பாணியில்… ரியோவின் ராம் அண்ட் லீலா திரைப்படம் எப்படி இருக்கு?

டோரதி திரைப்படத்தின் கல்யாண் விருந்து பாடல் புரோமோ குறித்து கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

கல்யாண விருந்து என்ற முதல் பாடலை அந்தோணிதாசன் பாட, இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த பாடல் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டோரதி திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது:

இந்த டோரதி திரைப்படமானது இரு நண்பர்களுக்கு இடையே நடக்கும் கைகலப்பு மற்றும் நகைச்சுவையான ஒரு வித்தியாசமான படமாக உருவாக்கப்பட்டுள்ளதாம். இது கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள 10வது திரைப்படம் அதனால்; இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் ஒரு பீல் குட் கதையில் நிவின் பாலி.. மனதை வென்றதா பெத்லகேம் குடும்பா யூனிட் படம்? – ரிவியூ இதோ!

இதில் நடிகர்கள் சனந்த் மற்றும் ரிஷிகாந்த் லீட் நடிகர்களாக நடிக்க, நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். கல்யாணம் மற்றும் இரு நண்பர்கள் போன்ற ஒரு வித்தியாசமான கதை கொண்ட படமாக உருவாகியுள்ளது. இதற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க, கார்த்தி சுப்புராஜே தயாரித்துள்ளார். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us