Karthik Subbaraj: இளையராஜாவுடன் பணியாற்றுவது என் வாழ்நாள் கனவு.. தனது புதிய படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட பதிவு!
Director Karthik Subbaraj About Ilaiyaraaja : தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துவருபவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் புதிய படத்தை இயக்கும்பணியில் இருக்கும் நிலையில், இதற்கு இளையராஜா இசையமையாகிறார். இந்நிலையில் இப்படம் குறித்து விவரமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கோலிவுட் சினிமாவில் சிறப்பான இயக்குநராக இருந்துவருபவர் கார்த்திக் சுப்புராஜ் (Karthik Subburaj). இவர் இறுதியாக நடிகர் சூர்யாவின் (Suriya) ரெட்ரோ (Retro) படத்தை இயக்கியிருந்தார். இந்த படமானது இவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இதில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டில் மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக எந்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார் என எதிர்பார்க்கப்பட்டுவந்த நிலையில், அவர் சிறுவர்களை கொண்டு ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் தனது 10வது படத்தை இயக்கியுள்ளாராம். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா (Ilaiyaraaja) இசையமைத்துவருகிறார் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இளையராஜா மற்றும் கார்த்திக் சுப்புராஜுடன் இணையும் முதல் படம் என்ற நிலையில், இது தொடர்பான விஷயங்கள் வைரலாகிவந்தது. அந்த வகையில் சமீபத்தில் இப்படத்தை குறித்து விளக்கமான பதிவு ஒன்றை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: காஜல் அகர்வால் நடிப்பில் தி இந்தியா ஸ்டோரி படம் எப்போது ரிலீஸ் ஆகிறது? அப்டேட் இதோ
இளையராஜாவின் இசையில் தனது புதிய படம் உருவாகுவது குறித்து கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட பதிவு:
About my 10th Dream……❤️
Maestro @ilaiyaraaja Sir 🙏@guneetm @Achin1087 #JyotiDeshpande@sikhyaent @jiostudios #DhammamFilms#Dream10Blessing1540#KS10Maestro1540https://t.co/Gs2QxEH1od pic.twitter.com/3MU0g19ViA
— karthik subbaraj (@karthiksubbaraj) May 22, 2026
அந்த பதிவில் கார்த்திக் சுப்புராஜ், எனது 10 வது படம். என் இதயத்தில் ஆழமாக வேரூன்றிய ஒரு கதை. இதை விக்ரமின் மகான் படத்திற்குப் பிறகு நான் எடுக்க விரும்பிய படம் இதுதான். ஒரு கதை, அதைச் சொல்பவரையும், அது சொல்லப்பட வேண்டிய நேரத்தையும் தானே தேர்ந்தெடுக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தக் கதை தனக்கென நேரம் எடுத்துக்கொண்டது, இப்போது அதைச் சுற்றியுள்ள மிகச் சிறந்த நபர்களுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு கிடைத்த மிக அற்புதமான ஆசீர்வாதம் என்னவென்றால், இசை மேஸ்ட்ரோ இளையராஜா சார் இதற்கு இசையமைத்ததுதான். இது அவருடைய 1540வது படம். நான் ராஜா சாரின் இசையைக் கேட்டு வளர்ந்தவன்.
இதையும் படிங்க: கருப்பு படத்திலிருந்து வெளியானது அது தலோரே வீடியோ பாடல்!
என் வாழ்க்கையின் ஒவ்வொரு உணர்வும் ஏதோ ஒரு வகையில் அதனுடன் தொடர்புடையது. அவருடைய பாடல்களிலோ அல்லது பின்னணி இசையிலோ மகிழ்ச்சி, சோகம், அன்பு, கோபம், கருணை, பரிவு, ஊக்கம் என அனைத்தும் கலந்திருக்கும். அவர் எனக்கு ஒரு வாழ்க்கை முறை, நம்மில் பலருக்கும் அப்படித்தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன்”, மேலும் இதில் இசைஞானி இளையராஜாவுடன் பணியாற்றும் அனுபவம் குறித்து கார்த்தி சுப்புராஜ் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.