காஜல் அகர்வால் நடிப்பில் தி இந்தியா ஸ்டோரி படம் எப்போது ரிலீஸ் ஆகிறது? அப்டேட் இதோ
Kajal Aggarwals The Indian Story Movie Release Update | நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி உள்ள தி இந்தியா ஸ்டோரி படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி இணையத்தில் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களான நடிகர்கள் தளபதி விஜய், அஜித் குமார், சூர்யா, தனுஷ், கார்த்தி மற்றும் ரவி மோகன் என பலருடன் இணைந்து நடித்துள்ளார். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான பெரும்பான்மையான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவர் நாயகியாக பல ஹிட் படங்களை கொடுத்து வந்தாலும் தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் மொழிகளிலும் நடித்துள்ளார். இதில் தமிழ் மொழியைவிட அதிக அளவில் நடிகை காஜல் அகர்வால் தெலுங்கு சினிமாவில் படங்களில் நடித்துள்ளார். அதன்படி தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகர்களாக வலம் வரும் பலருடன் இணைந்து நடிகை காஜல் அகர்வால் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு அதிக அளவில் தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் தி இந்தியா ஸ்டோரி.




ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகும் தி இந்தியா ஸ்டோரி:
இந்தி மொழியில் உருவாகி உள்ள இந்த தி இந்தியா ஸ்டோரி படத்தை இயக்குநர் சேத்தன் டிகே எழுதி இயக்கி உள்ளார். நடிகை காஜல் அகர்வால் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்த படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் படம் வருகின்ற ஜூலை மாதம் 24-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… ஜார்ஜ் குட்டியின் குடும்பத்திற்கு என்ன ஆனது? த்ரிஷ்யம் 3 படத்திற்கு மக்கள் கொடுத்த விமர்சனம் இதோ
தி இந்தியா ஸ்டோரி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The field that feeds you.
The field that buries you.#TheIndiaStory, Slow Poison In Progress, In Cinemas 24th July 2026Releasing in 3 languages #Hindi #Tamil #Telugu #IndiasMostShockingTruth@MsKajalAggarwal @shreyastalpade1 @murlisharma72 @manishwadhwa @DkChettan… pic.twitter.com/cA3ddKvXQg
— Zee Studios (@ZeeStudios_) May 21, 2026
Also Read… துல்கர் சல்மானின் ஐ அம் கேம் படத்தின் ரிலீஸ் தேதியை லாக் செய்தது படக்குழு