ரீல் டு ரியல்! கோட் பட நம்பர் பிளேட்டை முதல்வர் விஜய்க்கு பரிசளித்த வெங்கட் பிரபு!
கோட் படத்தில் விஜய் பயணிக்கும் கார்களில் TN07 CM 2026 என்ற எண் இடம் பெற்றிருந்தது. விஜய் 2026 ஆம் ஆண்டு முதல்வராவதை கணிக்கும் விதமாக அந்த நம்பர் பிளேட்டை இயக்குநர் வெங்கட் பிரபு வைத்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு அந்த நம்பர் பிளேட்டை பரிசளித்திருக்கிறார்.
கட்சி ஆரம்பித்து சந்தித்த முதல் தேர்தலிலேயே 108 இடங்களை கைப்பற்றி பிற கட்சிகளின் ஆதரவுடன் முதல்வராகியிருக்கிறார் விஜய். கடந்த மே 10, 2026 அன்று அவர் முதல்வராக பதவியேற்றார். அவர் முதல்வராக பதவியேற்ற தினத்தில் இருந்து கோட் படத்தில் இடம்பெற்ற TN 07 CM 2026 என்ற நம்பர் பிளேட் வைரலாகி வருகிறது. இதனையடுத்து அன்றே கணித்த வெங்கட் பிரபு என பலரும் டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்த நிலையில் முதல்வர் விஜய்யை சந்தித்த வெங்கட் பிரபு கோட் படத்தில் இடம் பெற்ற நம்பர் பிளேட்டை ஃபிரேம் போட்டு அதனை அவருக்கு பரிசளித்துள்ளார்.
கோட் பட நம்பர் பிளேட்டை பரிசளித்த வெங்கட் பிரபு
கோட் படத்தில் விஜய் பயணிக்கும் கார்களில் TN07 CM 2026 என்ற எண் இடம் பெற்றிருந்தது. விஜய் 2026 ஆம் ஆண்டு முதல்வராவதை கணிக்கும் விதமாக அந்த நம்பர் பிளேட்டை இயக்குநர் வெங்கட் பிரபு வைத்திருந்தார். படம் வெளியானபோதே இது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் தற்போது தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில் இந்த நம்பர் பிளேட் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இந்த நிலையில் விஜய்யை நேரில் சந்தித்த வெங்கட் பிரபு அவருக்கு கோட் பட நம்பர் பிளேட் மாதிரியை பரிசாக வழங்கியிருக்கிறார்.




இதையும் படிக்க : நடிகர் முத்துக்காளையின் மனைவி சிகிச்சை பலனின்றி மரணம் – அதிர்ச்சி தகவல்
வெங்கட் பிரபுவின் எக்ஸ் பதிவு
A history is made..
From a thought… to a vision… to this moment.
Happy to have met our honourable CM @TVKVijayHQ na today and present the very first manifestation of #GOAT. ❤️❤️❤️
This is only the beginning.
TN07CM2026 pic.twitter.com/VxwvFOKTo4— venkat prabhu (@vp_offl) May 18, 2026
இதையும் படிக்க : ராஜ்மோகனின் அமைச்சர் பதவிக்கு எதிர்ப்பு தெரிவித்த விஷால்… ஆதரவு குரல் கொடுக்கும் கோலிவுட் பிரபலங்கள்!
இது தொடர்பாக அவர் தனது பதிவில், வரலாறு உருவாக்கப்பட்டிருக்கிறது. எண்ணத்தில் இருந்து பார்வையாக தற்போது இந்த தருணமாக மாறியிருக்கிறது. மாண்புமிகு முதல்வர் விஜய் அண்ணாவை இன்று சந்தித்து அவருக்கு எனது பரிசை வழங்கியதில் மகிழ்ச்சி. இது தொடக்கம் மட்டும் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில் விஜய்யை நடிகர் பிரஷாந்த் மற்றும் அவரது தந்தையும் பிரபல நடிகருமான தியாகராஜனும் இன்று சந்தித்தனர். அவர் தமிழக முதல்வராக பதவியேற்றதற்கு இருவரும் வாழ்த்து தெரிவித்தனர். கோட் படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 90களில் இருவரும் போட்டி நடிகர்களாக இருந்த நிலையில் தற்போது அவருடன் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் இணைந்து கேரக்டர் ரோலில் பிரஷாந்த் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.