AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு – தரமான உணவு கிடைக்க ஆணை

சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பித்து சீரமைக்கும்படி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் 383, மற்ற நகரங்களில் உள்ள 237 அம்மா உணவகங்களை புதுப்பிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் தரமான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், சுவையான தரமான உணவு கிடைப்பதை உறுதிய செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு – தரமான உணவு கிடைக்க ஆணை
முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 18 May 2026 18:18 PM IST

சென்னை, மே 18 : முதல்வராக பதவியேற்றதில் இருந்து பல அதிரடி திட்டங்களை விஜய் அறிவித்து வருகிறார். அந்த வகையில்  சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பித்து சீரமைக்கும்படி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் 383, மற்ற நகரங்களில் உள்ள 237 அம்மா உணவகங்களை புதுப்பிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் தரமான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், சுவையான தரமான உணவு கிடைப்பதை உறுதிய செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு

இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மூலமாக 237 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க : “பொதுவாழ்வில் இருந்து தற்காலிகமாக விலகுகிறேன்”.. முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். அதிரடி அறிவிப்பு!

சமீப காலங்களில் இவ்வுணவகத்தில் அளிக்கப்படும் உணவு வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என்று தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், உரிய அரசுத் துறை செயலாளர்களுடன் கலந்தாலோசித்து, அம்மா உணவகங்களுக்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறும், சமையல் உபகரணங்களை உடனடியாகக் கொள்முதல் செய்யுமாறும், சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளை தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.

முதல்வரின் எக்ஸ் பதிவு

 

இந்த மறுசீரமைப்பிற்கும், பொருட்கள் கொள்முதல் செய்வதற்கும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் பொது நிதியிலிருந்து செலவினங்களை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எளிய மக்களுக்கு குறைந்த விலையில் தரமான உணவு வழங்கும் நோக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அம்மா உணவகம் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் எராளமான மக்கள் பயனடைந்ததனர். இந்த திட்டத்தின் மூலம் காலை, மதியம், இரவு என  ஒரு நாள் உணவுக்கு சராசரியாக ரூ.20 வரை மட்டுமே செலவாகும். இதனால் சென்னை போன்ற பெருநகரங்களில் குறைந்த ஊதியத்தில் வேலைபார்க்கும் நபர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்தது.

இதையும் படிக்க : அவங்களா கிளப்பி விடுறாங்க… முதல்வர் பதவி விவகாரத்தில் திருமாவளவன் கொடுத்த அதிரடி விளக்கம்!

இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த போது அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பட அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இது மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது 2026ல் தவெக ஆட்சிக்கு வந்த நிலையில் வந்துள்ள நிலையில் அம்மா உணவகத்தை மேம்படுத்த முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளது மக்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.

 

Follow Us